ஃபகத் பாசிலும் நானும்… மனம் திறந்து பேசிய நடிகர் சூர்யா!
Actor Suriya talks Fahadh Faasil | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவரது நடிப்பில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் உருவாகி வெளியாக உள்ள டோண்ட் ட்ரபிள் த ட்ரபிள் படத்தின் விழாவில் கலந்துகொண்டு சூர்யா பேசியது வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் பழம்பெரும் இயக்குநர் ஃபாசிலின் மகனாக அறிமுகம் ஆனார் நடிகர் ஃபகத் பாசில். இயக்குநர் ஃபாசில் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் மொழியிலும் பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார். அந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு அவர்களின் சினிமா கெரியரில் ஒரு ப்ரேக்த்ரு படமாக அது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரபல இயக்குநரின் மகன் என்பதாலேயே ஃபகத் ஃபாசில் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. முதல் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் பல ட்ரோல்களை சந்தித்தார் ஃபகத் பாசில். அதனைத் தொடர்ந்து சுமார் 9 வருடம் சினிமாவில் இருந்து விலகி சினிமா தொடர்பான படிப்புகளை வெளிநாட்டில் முடித்துவிட்டு மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். அப்படி அவர் கொடுத்த எண்ட்ரி மாசாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.
அந்த வகையில் அதனைத் தொடர்ந்து ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் அனைத்து கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார் ஃபகத் ஃபாசில். இந்த நிலையில் அவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகி வெளியாக உள்ள படம் டோண்ட் ட்ரபிள் த ட்ரபிள். இந்தப் படத்தின் புரோமோசன் விழாவில் கலந்துகொண்டு சூர்யா ஃபகத் பாசில் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஃபகத் பாசிலும் நானும்… மனம் திறந்து பேசிய நடிகர் சூர்யா:
ஃபஃபா (ஃபஹத் ஃபாசில்) என்னை அண்ணா என்றுதான் அழைப்பார். நாங்கள் இருவரும் நிறையப் பேசியிருக்கிறோம், நிறைய நேரத்தைச் ஒன்றாகச் செலவிட்டிருக்கிறோம். காலை, மதியம், மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் நாங்கள் பேசியிருக்கிறோம்; எங்களுக்குள் பல அழகான நினைவுகள் உள்ளன. எங்கள் ஆரம்பக்காலம், அப்போது நடந்தவை மற்றும் எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகள் குறித்தும் நாங்கள் பேசியிருக்கிறோம். நாங்கள் எளிதாக இந்த நிலைக்கு வரவில்லை. முன்னேறுவதற்கு முன்பு நிறையப் போராட்டங்களையும் வலிகளையும் சந்தித்தோம்.
ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அது யாருக்குப் பொருந்தும் என்பது போன்ற கணக்கீடுகளை நாங்கள் செய்வோம். எப்போதும் எங்கள் பிம்பம் குறித்தே கவலைப்படுவோம். ஆனால், என் கணக்கீடுகள் பல சமயங்களில் தவறாகவே அமைந்துள்ளன. ஃபஹத் ஃபாசிலைப் பொறுத்தவரை, அவர் ஒரு கதாபாத்திரத்தின் மையக்கருவையும், அந்த உள்ளடக்கத்தை ரசிகர்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்க முடியுமா என்பதையும்தான் பார்க்கிறார். அதனால்தான் எங்களுக்கு அப்படிப்பட்ட சிறந்த படங்கள் கிடைக்கின்றன. என் திரைப்பயணத்தில் அந்த அணுகுமுறையை நான் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.
Also Read… இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
FaFa called me brother. We’ve talked so much and spent so much time together. We talk in the morning, afternoon, evening, mid-evening, night we’ve had so many beautiful memories with each other.
We’ve talked about our beginning stage, what happened, our similarities. We didn’t…
— Movies Singapore (@MoviesSingapore) September 27, 2026
Also Read… Anbil Avan: அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்!