AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெத்தலேகம் குடும்ப யூனிட் பட இயக்குநர் முந்தைய படங்கள பாத்து இருக்கீங்களா? லிஸ்ட் இதோ!

Director Girish AD Movies List Here | மலையாள சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் பெத்தலேக குடும்ப யூனிட் படம். இந்தப் படத்தின் இயக்குநரின் முந்தைய படங்களின் பட்டியளை தற்போது பார்க்கலாம்.

பெத்தலேகம் குடும்ப யூனிட் பட இயக்குநர் முந்தைய படங்கள பாத்து இருக்கீங்களா? லிஸ்ட் இதோ!
கிரிஷ் ஏடிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Sep 2026 08:00 AM IST

மலையாள சினிமாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் பெத்தலேக குடும்ப யூனிட். நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்த பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் கதை மிகவும் சாதாரணமான ஒரு குடும்ப கதை என்றாலும் படம் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தப் படம் வசூலிலும் பெரிய அளவில் சாதனைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த பெத்தலேகம் குடும்ப யூனிட் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேறபைப் பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் மலையாள சினிமாவில் முன்னதாக வெளியான படங்கள் என்னென்ன மற்றும் அந்தப் படங்களை எந்த ஓடிடியில் காணக் கிடைக்கின்றது என்று பார்க்கலாம்.

பெத்தலேகம் குடும்ப யூனிட் பட இயக்குநரின் முந்தைய பட லிஸ்ட் இதோ:

அதன்படி மலையாள சினிமாவில் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது தண்ணீர் மதன் தினங்கள். இந்தப் படம் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இருந்தது. இது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக சூப்பர் ஷரண்யா என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாபா முத்திரை – வைரலாகும் செய்தி

இந்த நிலையில் இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியான படம் பிரேமலு. இந்தப் படத்தின் மூலமாகதான் நடிகர்கள் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ இருவரும் அதிக அளவில் பிரபலமானார்கள். முன்னதாக இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைத்த நிலையில் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி நான்காவதாக திரையரங்குகளில் வெளியான படம் ஐ அம் காதலன். இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… டோரத்தி படம் எப்படி இருக்கும்? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்

Follow Us