நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
Bethlehem Kudumba Unit Movie OTT Update | நடிகர் நிவின் பாலி நடிப்பில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மலையாள சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி முன்னதாக வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியானது பெத்தலேகம் குடும்ப யூனிட். இந்தப் படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி இருந்தார்.
ரொமாண்டிக் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் கேரள சினிமாவில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையைப் படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதும் இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
மேலும் இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். இந்த ஆண்டில் மட்டும் வரிசையாக நடிகை மமிதா பைஜூ நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் இந்த பெத்தலேகம் குடும்ப யூனிட் படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி இந்த பெத்தலேகம் குடும்ப யூனிட் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 02-ம் தேதி 2026-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… இயக்குநர் ராமின் இயக்கத்தில் வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#BethlehemKudumbaUnit Streaming Expected on October 2 Via JioHotstar 🍿
Stay Tuned for Official Confirmation..#BKU pic.twitter.com/F12uwBK84T
— South Indian BoxOffice (@BOSouthIndian) September 23, 2026
Also Read… The Paradise Movie Review: நானி ஜெயித்தாரா? எப்படி இருக்கிறது தி பாரடைஸ் படம்.. முழு விமர்சனம் இதோ!