AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டெமோகிராஸி ரூம்ல பேசனும்னா பிரச்சனை இருக்கனும்… பிக்பாஸில் சண்டையை மூட்ட திட்டமிடும் லக்‌ஷ்மி பிரியா – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் புதிய பிரச்சனையை கிளப்ப போட்டியாளர் லக்‌ஷ்மி பிரியா திட்டமிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

டெமோகிராஸி ரூம்ல பேசனும்னா பிரச்சனை இருக்கனும்… பிக்பாஸில் சண்டையை மூட்ட திட்டமிடும் லக்‌ஷ்மி பிரியா – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Sep 2026 13:26 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 16 நாட்கள் நிறைவடைந்து தற்போது 17-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 19 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டியாளர்கள் வைல்கார்ட் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டனர். தொடர்ந்து இதுவரை 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து தொடர்ந்து சண்டைகளுக்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது. மேலும் இந்த மூன்றாவது வாரத்தின் வீட்டின் லீடராக அவினாஷ் தேர்வாகி உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு தினமும் டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு டாஸ்கிலும் போட்டியாளர்கள் இடையே சண்டைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.

இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் புதிதாக டெமோகிரஸி அறை என்ற ஒன்று உள்ளது. அதன்படி தமிழக அரசியலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி என்று இரண்டு இருப்பது போல இந்த நிகழ்ச்சியில் ஆளும் அணி மற்றும் எதிரணி என இரண்டு அணிகள் உள்ளது. அவர்களில் ஆளும் அணி மீது ஏதேனு தவறு உள்ளதா என்பதைப் பார்ப்பதே எதிர் அணியின் நோக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் சண்டையை மூட்ட திட்டமிடும் லக்‌ஷ்மி பிரியா:

இந்த நிலையில் ஆளும் அணியில் உள்ளவர்களை டெமோகிரஸி அறையில் கேள்வி கேட்க வேண்டும் என்றால் பிரச்சனை நடக்க வேண்டும் என்று போட்டியாளர் லக்‌ஷ்மி பிரியா கூறுகிறர். மேலும் அப்படி பிரச்சனை நடக்கவில்லை என்றால் நாமலே பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று லக்‌ஷ்மி பிரியா மற்ற போட்டியாளர்களுடன் அமர்ந்து பேசுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் அவினாஷ் தலைமையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இரண்டு அணிகள் பிரிந்ததில் இருந்து தொடர்ந்து சின்ன சின்ன விசயங்களுக்கும் எதிரணியில் உள்ளவர்கள் சண்டைகளை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஃபகத் பாசிலுக்கு இருக்கும் அதே பிரச்சனை அசோக் செல்வனுக்கும் இருக்கா? அவரே சொன்ன விசயம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Also Read… அமரன் படத்திற்காக தேசிய விருதை பெற்றார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

Follow Us