ஃபகத் பாசிலுக்கு இருக்கும் அதே பிரச்சனை அசோக் செல்வனுக்கும் இருக்கா? அவரே சொன்ன விசயம்
Ashok Selvan talks about ADHD | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் சமீபத்தில் அவரது அன்பில் அவன் படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய போது தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடிக்க உள்ளதாக சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அன்பில் அவன். இந்தப் படத்தின் மூலமாக நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் நாயகனாக கலம் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அன்பில் அவன் படத்தை இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் விழா சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் அதில் அசோக் செல்வன் தனக்கு இருக்கு பிரச்சனை குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஃபத்திற்கு இருக்கும் அதே பிரச்சனை அசோக் செல்வனுக்கும் இருக்கா?
அதன்படி அந்த விழாவில் நடிகர் அசோக் செல்வன் பேசியதாவது, சமீபத்தில்தான் எனக்கு ADHD இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு, என்னைப் பற்றி எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைத்தது. நேரத்தை நிர்வகிப்பது எனக்கு எப்போதும் சற்று கடினமாகவே இருந்து வருகிறது. அதனால் இப்போது, எனக்காக நிறைய நினைவூட்டல்களை (reminders) அமைத்துக்கொள்கிறேன்.
அதேபோல, இரவில் நான் அதிகமாகச் சிந்திக்கும் பழக்கம் கொண்டவன். அதனால், இரவு நேரங்களில் மிக முக்கியமான அல்லது தீவிரமான விஷயங்களைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம் என்று என் மனைவி கீர்த்தியிடம் சொல்லிவிடுவேன். நமது மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்வதே சிறந்தது என்பதை இப்போது நான் உணர்ந்துகொண்டேன்.
இந்த ADHD என்பது கவனக்குறைவு மற்றும் மிகைச்செயல்பாட்டுக் கோளாறு என்பதாகும். முன்னதாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள ஃபகத் பாசில் தனக்கு இந்த பிரச்சனை இருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Recently, I was diagnosed with ADHD. After that, I gained a little more clarity about myself.
I’ve always found time management a little difficult. So now, I set a lot of reminders for myself.
Similarly, I tend to overthink a lot at night. So I tell my wife, Keerthi, not to… pic.twitter.com/dNH9Bnnf4S
— Movies Singapore (@MoviesSingapore) September 22, 2026
Also Read… பிக்காசோ படம் தனுஷின் அந்த படத்தின் வெற்றியில் பாதியாவது இருக்க வேண்டும் – அபிஷன் ஜீவிந்த்