பிக்பாஸில் சாப்பாட்டு விசயத்தில் அன்சர் மற்றும் சாதிகா இடையே சலசலப்பு – என்ன செய்வார் லீடர்
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இன்று முதல் நாளே போட்டியாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கி தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. அதன்படி முந்தைய சீசன்களைப் போல ஒவ்வொரு வாரமும் வீட்டிற்கு லீடர் யார் என்பதை டாஸ்க் வைத்து முடிவு செய்வார்கள். அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வாரம் சாதிகா வீட்டின் லீடராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் வீட்டின் லீடராக ஷமா தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை சட்டமன்றத்தை எடுத்துக்காட்டாக வைத்து லீடர் அணி ஆளும் அணி என்றும் எதிர் அணி ஒன்றையும் உருவாக்கி பிக்பாஸ் வீட்டை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு லீடர்களும் வீட்டை சரியாக நடந்தவில்லை என்று போட்டியாளர்கள் அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து ராஜினாம செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த மூன்றாவது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வீட்டின் லீடராக அவினாஷ் தேர்வாகி உள்ளார். இவர் தேர்வான உடனே இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டு வீட்டின் வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் வீட்டில் தொடர்ந்து சலசலப்புகளும் ஏற்பட்டு வருகின்றது.
பிக்பாஸில் சாப்பாட்டால் அன்சர் மற்றும் சாதிகா இடையே சலசலப்பு:
அதன்படி முன்னதாக அணிகள் பிரிக்கப்படும் போதே சாதிகா மற்றும் அன்சர் இடையே பிரச்சனை கிளம்பியது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் சாப்பாடு பகிர்ந்து கொடுக்கும் போது அன்சர் மற்றும் சாதிகா இடையே சண்டை ஏற்படுகிறது. இதனால் சாதிகா சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டு கோபமாக செல்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




Also Read… நந்தன் பயணம் இன்னும் முடியவில்லை – இயக்குநர் சரவணன் வெளியிட்ட பதிவு
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட வீடியோ:
Also Read… ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் லிஸ்ட் இதோ!