Ajith Kumar: அடுத்த ஆண்டில் எனது திட்டம்..? ஓபனாக சொன்ன அஜித் குமார்!
Ajith Kumar Next Year Plan: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் புதிய படமானது உருவாக்கவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேசிய அஜித் குமார், தனது அடுத்த வருடத்தின் திட்டம் குறித்து பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் நாயகனாகவும், இந்திய ரசிகர்கள் கொண்டாடவும் கார் ரேஸராகவும் இருந்துவருபவர் தல அஜித் குமார் (Ajith Kumar). இவர் தமிழில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Aadhik Ravichandran) இயக்கத்தில் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கும் மேல் வசூல் சாதனை செய்திருந்தது. இப்படம்தான் அஜித்தின் வாழ்க்கையிலே அதிகம் வசூல் செய்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் இந்த கூட்டணி டேர் டேவில் (Dare Devil) என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கடந்த மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதற்கு பின் சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. தற்போது அஜித் குமார் லண்டனில் நடைபெற்றுவரும் கார் ரேஸ் போட்டியில் பங்குபெற்றுவரும் நிலையில், அதில் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அஜித் குமார், தனது அடுத்தவருட திட்டம் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: பிக்பாஸில் விஜய் சேதுபதியிடம் கம்ப்ளெயிண்ட் செய்த ஆனந்தி.. கலாய்த்து பேசிய லட்சுமி பிரியா – முனியம்மாள்.. வைரலாகும் புரோமோ!
தனது அடுத்த வருடத்தின் திட்டம் குறித்து வெளிப்படையாக பேசிய அஜித் குமார்:
அந்த நேர்காணலில் பேசிய அஜித் குமார், “நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.. அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.. எனது புதிய திரைப்படத்தின் (டேர் டெவில்) படப்பிடிப்பை 2026ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். மேலும், கடவுளின் அருளால், அடுத்த ஐரோப்பிய சீசன் தொடங்குவதற்குள் அந்த ஷூட்டிங்கை முடித்துவிடுவேன்” என அதில் அவர் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ராக்கா படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சேர்க்கப்போகிறார்.. அட்லீ குறித்து சிபி சக்கரசவர்த்தி பேச்சு!
அடுத்த வருடத்திற்கான தனது திட்டம் குறித்து பேசிய அஜித் குமாரின் வீடியோ பதிவு:
Q: What is your plan Next year..❓ I heard There will be some action happening in what you do for living otherwise..#AjithKumar: I feel a lot of gratitude.. Big hello to everyone.. I plan to start my new feature film filming sometime in November. And, God willing, I complete it…
— Laxmi Kanth (@iammoviebuff007) September 19, 2026
நடிகர் அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணியில் உருவாக்கவுள்ள புதிய திரைப்படம்தான் டேர் டெவில். இதில் அஜித் ஹீரோவாக நடிக்க, அவரின் மனைவியும் முன்னால நடிகையுமான ஷாலினி அஜித் குமார் தயாரிப்பாளராக தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, சிறப்பாக பாடல்களும் தயாராகியுள்ளது. மேலும் இப்படத்தில் மோகன்லால் முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம். மேலும் நடிகை யார் என்ற அப்டேட் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.