STR 51 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்
Director Ashwath Marimuthu talks about STR 51 movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் எஸ்டிஆர் 51 படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் தமிழ் சினிமாவில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குநராக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் ட்ராகன். நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் பல விருதுகளையும் தொடர்ந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசனின் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வரும் போதே ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது சிம்புவின் படத்தினை ஒத்திவைத்துவிட்டு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படமான தர்மன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சிலம்பரசனின் படம் எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியுள்ளார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.




STR 51 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
அதன்படி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது, சிலம்பரசன் ரசிகர்களே, தயாரிப்பாளர் இங்கேயே என்னுடன் இருக்கிறார், நான் எங்கும் ஓடிவிடவில்லை. ‘அரசன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ‘தர்மன்’ படம் முடிந்ததும், உடனடியாக STR 51 படத்தை தொடங்கவுள்ளேன். இடையில் இந்த ஒரு வாய்ப்பு கிடைத்ததால், சிம்புவும் ஏஜிஎஸ் நிறுவனமும் என்னை இதைச் செய்ய அனுமதித்தனர். STR 51 மிகச் சிறப்பாக இருக்கும்; தயாரிப்பாளர்கள் கதையைப் படித்துவிட்டார்கள். இதற்கிடையில், சிம்பு இரண்டு அற்புதமான இயக்குநர்களுடன் படங்களில் நடித்து வருகிறார். இது மிகச் சிறந்த படமாக அமையும் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“I am having a producer right beside me, I’m not running anywhere, Silambarasan fans! ❤️#STR51 update #Arasan shooting is going on. After #Dharman is completed, I’m immediately starting that film. I’ve got this quick opportunity in between, thus Simbu and AGS Entertainments let…
— Movies Singapore (@MoviesSingapore) September 18, 2026