வெளியானது சந்தானத்தின் லவ் பைட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Love Bite Movie First Look Poster Out Now | நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் லவ் பைட். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் நாட்டு மக்களிடையே அறிமுகம் ஆனவர் நடிகர் சந்தானம் (Actor Santhanam). தொடர்ந்து அந்த நிகழ்ச்சிகளின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த சந்தானம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் பெயரிப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சந்தானம் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் வெளியான மன்மதன் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறியத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், ஆர்யா, ரவி மோகன், சூர்யா, அஜித், தனுஷ், கார்த்தி, ஜீவா மற்றும் ரஜினிகாந்த் என பலரது படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த நடிகர் சந்தானம் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அறை எண் 302-ல் கடவுள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதில் இருந்து விலகு முழுக்க முழுக்க நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




வெளியானது சந்தானத்தின் லவ் பைட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
அந்த வகையில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். ஹாரர் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் லவ் பைட். இந்தப் படம் ஃபேண்டசி காமெடி பாணியில் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Also Read… ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழா.. ஒரே மேடையில் CM விஜய்- நடிகை த்ரிஷா.. மணமக்களுடன் போஸ்!
லவ் பைட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The outbreak is serious. The people handling it? Not so much 😂
Your next dose of infectious laughter arrives with #LoveBite in theatres this December!
#LoveBiteFirstLook
#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh
@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @Ags_production@iamsanthanam @selvinrajxavier @aparnaDasss #Anandraj #VTVGanesh #MottaiRajendran @PradeepERagav @foxnmusic @DopYuva #SasiKumar @stuntsaravanan @ActorMuthukumar #Nirosha @adithya_kathir #RedinKingsley @thangadurai123 #KalkiRaja @Bjornsurrao @meenakshinswamy #PandiyaRajan @RaghuNorules @viyaki_s #SreejithGuruvayur @Synccinema @SuthanVFX @veeratypography @onlynikil @malinavin @Managersenthil @thinkmusicindia @NetflixIndia @thetabsofficial @Digitallypf
— AGS Entertainment (@Ags_production) November 7, 2026