குழந்தை மூஞ்சியில் ஒரு கொலைகாரி… பிக்பாஸில் சீக்ரெட் டாஸ்க் குறித்து பேசிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 9-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வார இறுதி எபிசோடில் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் உள்ள் போட்டியாளர்களிடையே சீக்ரெட் டாஸ்க் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடந்த 8-வது சீசனில் இருந்து இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 62-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் நடிகர் விஜய் சேதுபதி வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். அந்த வகையில் இந்த 9-வது வாரத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகள் குறித்து விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிபி திருந்துங்கடா அகடமி டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த டாஸ்கில் ஒரு சில போட்டியாளர்கள் தங்களுக்கான கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்து இருந்த நிலையில் ஒரு சிலர் தங்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தில் இருந்து அவ்வபோது வெளியே வந்து அவர்களின் சொந்த கேரக்டரில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த டாஸ்குடனே இந்த வாரம் சீக்ரெட் டாஸ்க் நடைப்பெற்றது. அந்த டாஸ்கை பிக்பாஸில் அஸ்மிதா மற்றும் ஜேசன் இருவரும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.




சீக்ரெட் டாஸ்க் குறித்து பேசிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ:
இந்த சீக்ரெட் டாஸ்கை செய்த கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பு டிடிஎஃப் வாசனிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சரியான கொலையாளியை கண்டுபிடிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் இன்று விஜய் சேதுபதி வரும் எபிசோடிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.
அதில் விஜய் சேதுபதி யார் அந்த கொலையாளி என்பதை அவர்களே முன்னடி வந்து அதனை சொல்லுமாறு சொல்ல பிக்பாஸ் போட்டியாளர் அஸ்மிதா அதனை தானே முன்வந்து தெரிவிக்கிறார். இதனைப் பார்த்த போட்டியாளர்கள் அதிர்ச்சியுடன் இருக்க குழந்தை மூஞ்சியில் ஒரு கொலைகாரி என்று விஜய் சேதுபதி கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸில் சீரியல் கில்லர் அஸ்மிதா என்பதை சரியாக கணித்த முனியம்மாள் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day62 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/BvQAEcD4Fm
— Vijay Television (@vijaytelevision) November 7, 2026
Also Read… வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் ஆல்பம்… உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?