தீபாவளி ஸ்பெஷல்.. விஜய் டிவியில் பேக் டூ பேக் வெளியாகும் புதிய படங்கள் என்னென்ன தெரிஞ்சிக்கோங்க!
Vijay TV Diwali 2026 Movies: தமிழில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான சின்னத்திரை தொலைக்காட்சியாக இருந்துவருவது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் 3 புதிய திரைப்படங்கள் பேக் டூ பேக் ஒளிபரப்பாகவுள்ளது. அது எந்நெந்த திரைப்படங்கள் என விவரமாக பார்க்கலாம்.
தமிழில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரியாலிட்டி ஷோ, சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் என அனைத்திற்கும் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்துவருவது விஜய் டிவி (Vijay Tv). இந்த தொலைக்காட்சியில் மக்கள் அதிகம் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை பார்வையிட்டுவருகிறார்கள். அந்த விதத்தில் 2026ம் ஆண்டு தீபாவளியை (Diwali 2026) முன்னிட்டு அன்று (08/11/2026) இந்த தொலைக்காட்சியில் பேக் டூ பேக் மூன்று புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது. அது என்னென்ன என விவரங்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் (Dhanush), சூர்யா (Suriya) மற்றும் அதர்வா (Atharvaa) நடித்திருந்த புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது. அது எந்த திரைப்படங்கள் என பார்க்கலாம்.
இதையும் படிங்க: மக்கள் என் பக்கம் இருக்காங்க…. அரசியல் குறித்து முதன்முறையாக மனம் திறந்த தனுஷ் – விமர்சனங்களுக்கு பதில்




அதர்வாவின் இதயம் முரளி திரைப்படம்:
நடிகர் அதர்வாவின் நடிப்பிலும், இயக்குநரும், தயாரிப்பளாருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்திலும் வெளியான திரைப்படம்தான் இதயம் முரளி. இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது தீபாவளியை முன்னிட்டு விஜய் டிவியில், தீபாவளி அன்று காலை 11 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: AK is Back.. வெற்றிக்கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் – வைரலாகும் வீடியோ!
தனுஷின் கர திரைப்படம்:
போர்த் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில், தனுஷ் நடித்திருந்த திரைப்படம்தான் கர. இந்த படமானது 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் திரியரங்குகளில் வெளியான நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு மதியம் 2:30 மணியளவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
கர திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது குறித்து விஜய் டிவி வெளியிட்ட பதிவு:
பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த கர திரைப்படம்! 🔥
தீபாவளி சிறப்பு திரைப்படம் – கர (Kara) | நாளை மதியம் 2:30 மணிக்கு நம்ம விஜய் டிவியில்…
#Kara #KaraOnVijayTV #VijayTV #VijayTelevision #StarVijay #VijayDeepavali https://t.co/0odyidKeyd
— Vijay Television (@vijaytelevision) November 7, 2026
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம்:
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், சூர்யா நடித்திருந்த திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் தீபாவளியை முன்னிட்டு மாலை 6 மணியளவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ஒளிபரப்பாகவுள்ளது குறித்து விஜய் டிவி வெளியிட்ட பதிவு:
மனதைத் தொடும் தருணங்களுடன் ஒரு அழகான பயணம்!
தீபாவளி சிறப்பு திரைப்படம் – விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – World Television Premiere | நவம்பர் 8 மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில…
#VishwanathandSons #Suriya #MamithaBaiju #Radhika #YogiBabu #WorldTelevisionPremiere #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) November 6, 2026
எனவே 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் பேக் டூ பேக் பிரம்மாண்டமான திரைப்படங்கள் ஒளிபரப்படவுள்ளது. இந்நிலையில் இந்த படங்களை கண்டுகளித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடலாம்.