AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

AK is Back.. வெற்றிக்கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் – வைரலாகும் வீடியோ!

Ajith Kumar Returns to Chennai: அஜித் குமார் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் போட்டிகளிலும் தனது அணியுடன் கலந்துகொண்டுவருகிறார். இந்நிலையில் இவர் டேர் டெவில் படத்தில் நடிக்கவுள்ள நிலையில், அதற்காக சென்னை திரும்பியுள்ளார். தனது கார் ரேஸ் வெற்றிக்கோப்பையுடன் அஜித் சென்னை திரும்பிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

AK is Back.. வெற்றிக்கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் – வைரலாகும் வீடியோ!
அஜித் குமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 07 Nov 2026 12:59 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஸ்டார் ஹீரோவாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரை ரசிகர்கள் தல என அன்போடு அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை மொத்தமாக 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த பாடானது கடந்த 2025 ஆண்டு இறுதியில் வெளியகியிருந்த நிலையில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் (Director Adhik Ravichandran) கூட்டணி இணைந்துள்ள திரைப்படம்தான் டேர் டெவில் (Dare Devil Movie). இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஷாலினி அஜித் குமார் (Shalini Ajithkumar) தயாரிப்பாளராக இருந்து தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில் தொடங்கியிருந்தது. இதன் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. அந்த விதத்தில் கார் ரேஸில் பிசியாக இருந்துவந்த அஜித் தற்போது, தனது டேர் டெவில் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னை திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க: ராம சகாப்தத்தின் தொடக்கம்.. முதல் நாளில் ராமாயணா உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

கையில் கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் குமார்:

அஜித் குமார் இந்தியா மற்றும் இந்திய சினிமாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடந்திருந்த கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிக்கோப்பைகளை வென்றுள்ளார். அந்த விதத்தில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கவுள்ள டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக சென்னை திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க: பொங்கல் ஸ்பெஷல்.. விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

அவர் சென்னை விமான நிலையத்தில், கையில் தனது கார் ரேஸ் பந்தைய வெற்றிக்கோப்பையுடன் திரும்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் குமார் குறித்த வீடியோ பதிவு;

டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்:

சமீபத்தில் இந்த டேர் டெவில் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடக்க பூஜைகள் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த பூஜையில் ஷாலினி அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், பிரபு மற்றும் சுனில் என பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதியில் சென்னையில் தொடங்கவுள்ளதாம். அதை முன்னிட்டு அஜித் குமார் தற்போது சென்னை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us