AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ராம சகாப்தத்தின் தொடக்கம்.. முதல் நாளில் ராமாயணா உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

Ramayana First Day Collection: இந்த 2026ம் ஆண்டு தீபாவளிக்கு உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்டுவந்த பிரம்மாண்ட திரைப்படம்தான் ராமாயணா. பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் நமித் மல்ஹோத்ராவின் படைப்பில் உருவாகியுள்ள இப்படமானது, முதல் நாள் முடிவில் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம சகாப்தத்தின் தொடக்கம்.. முதல் நாளில் ராமாயணா உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
ராமாயணா படத்தின் முதல் நாள் வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Nov 2026 17:25 PM IST

பான் இந்திய சினிமாவில் இந்த 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படம்தான் ராமாயணா பார்ட் 1 (Ramayana Part 1). இந்த படத்தை இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி (Director Nitesh Tiwari) இயக்க, நமித் மல்ஹோத்ரா தனது தயாரிப்பின் மூலம் உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீ ராமராக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), சீதையாக தமிழ் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ராவணனாக கன்னட நடிகர் யாஷ் (Yash) என பான் இந்திய நடிகர்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் மேலும் முக்கிய வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், ஷோபனா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது இந்து புராண கதையான ராமாயணத்தின் படைப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (05/11/2026) உலகமெங்கும் பான் இந்திய மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படமானது முதல் நாள் முடிவில் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோ!

முதல் நாள் முடிவில் ராமாயணா பார்ட் 1 படத்தின் வசூல் விவரம்:

இந்த படத்தில் சாய் பல்லவி, ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் போன்ற நடிகர்கள் தங்களின் திரை ஆளுமையை சிறப்பாகாவே செய்திருந்தனர். மேலும் ராமரை காட்டிலும் ராவணனின் கதாபாத்திரம் இந்த படத்தில் மிகவும் அதிக சக்திகொண்ட கதாபாத்திரமாக காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தெய்வசக்தி Vs தீயசக்தி.. 90ஸ் படம் போல இருக்கிறதா மூக்குத்தி அம்மன் 2..? – விமர்சனங்கள் இதோ!

மேலும் புராணத்தில் குறிப்பிட சீதையின் போலவே, சாதாரணமாக வெறும் அமைதியாக பெண்ணாக மட்டுமல்லாமல், ஒரு ராஜ்யத்தின் ராணியாக போர் கலைகளிலும் அவர் சிறந்தவர் என்று இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் காட்டப்பட்டுள்ளது. இந்த படமானது முதல் நாள் முடிவில் உலகமெங்கும்ஸ்குமார் ரூ 155 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராமாயணா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ராமாயணா பார்ட் 1 திரைப்படமானது 2026ம் ஆண்டு தீபாவளிக்கு சிறந்த திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் பாதி சில மெதுவான காட்ச்சிகளுடன் இருப்பதாக விமர்சனங்கள் இருக்கிறது. இப்படமானது இரு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகம் இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. மேலும் 2வது பாகம் வரும் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தில் பான் இந்திய நட்சத்திர பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கும் நிலையில், இதற்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us