AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ajith Kumar: அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோ!

Dare Devil Movie Shooting Pooja Video: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், தல அஜித் குமார் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம்தான் டேர் டெவில். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில் தொடங்கியிருந்தது. அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

Ajith Kumar: அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோ!
டேர் டெவில் திரைப்பட படப்பிடிப்பு பூஜை வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Nov 2026 14:39 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தல அஜித் குமார் (Ajith Kumar). இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் கார் ரேஸராகவும் இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இவர் இதுவரை கிட்டத்தட்ட 6 நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்றிருக்கிறார். இந்திய மற்றும் இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக நடிகர் அஜித் குமார் இந்த ரேஸில் கலந்துகொண்டுவருகிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இந்த ரேஸில் அஜித் குமார் இருந்த நிலையில், தற்போது சினிமாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Director Adhik Ravichandran) இயக்கத்தில் டேர் டெவில் (Dare Devil) என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதை அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் குமார் (Shalini Ajithkumar) தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதியில் சென்னையில் சிறப்பாக தொடங்கியிருந்தது. அந்த விதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்த கிளிம்ப்ஸ் வீடியோவை சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஓ ஹிட்டா.. சீன் திரைப்பட FDFS பார்த்த இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!

அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை கிளிம்ப்ஸ் குறித்த வீடியோ பதிவு:

நடிகர் அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் பூஜையில் அவரே கலந்துகொள்ளவில்லை. ஆனால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் உன்னி முகுந்தன், பிரபு, ஸ்ரீலீலா, சுனில், ரெடின் கின்ஸ்லே, ஆர். பார்த்திபன் மற்றும் பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர். மேலும் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத், சிறுத்தை சிவா, தரணி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தெய்வசக்தி Vs தீயசக்தி.. 90ஸ் படம் போல இருக்கிறதா மூக்குத்தி அம்மன் 2..? – விமர்சனங்கள் இதோ!

இந்த படமானது பக்கா ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கில் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதிக்கு மேல் நடிகர் அஜித் குமார் இணைவார் என கூறப்படுகிறது. இந்த படத்தை 2027ம் ஆண்டில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. விரைவபிள் இப்படம் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us