Tamil Nadu Weather forecast: நெருங்கும் தீபாவளி – அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
Tamil Nadu weather today : கேரள பகுதிகளில் இருந்து கர்நாடகாவின் தெற்கு பகுதி வரை காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகவும் இதன் காரணமாக தமிழகத்தின் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 6 : தமிழகத்தில் தீபாவளி திருநாளுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடி கனமழை (Heavy Rain Alert) பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 6, 2026 இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் இருந்து கர்நாடகாவின் தெற்கு பகுதி வரை, வளிமண்டலத்தின் கீழடுக்கில் சுமார் 0.9 கி,மீ. உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவாதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : குதிரை பேர புகார்.. முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் கைது.. தவெக அரசின் ஏவல்துறைக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..




இதன் காரணமாக நவம்பர் 6, 2026 இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம் ,புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 7, 2026 நாளை மதுரை, தேனி, திண்டுக்கல், ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு கனமழை எச்சரிக்கை
குறிப்பாக தீபாவளி நாளான நவம்பர் 8, 2026 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ய்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 9, 2026 அன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி எதிரொலி.. தேர்தல் ஆணையத்திற்கும், தவெக எம்எல்ஏவுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சென்னை வானிலை நிலவரம்
அதனைத் தொடர்ந்து நவம்பர் 6, 2026 இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நவம்பர் 7, 2026 சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.