AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக அரசு வங்கி கணக்கை ஹேக் செய்த கேரள சைபர் கும்பல்.. கருவூலக் கணக்கை முடக்கி ரூ.11 லட்சம் திருட்டு!

Tamil Nadu government bank account hacked: தமிழ்நாடு அரசின் கருவூல வங்கி கணக்குகளை ஹேக் செய்து நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.11 லட்சம் ஆன்லைன் மூலம் திருடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சைபர் கும்பல் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை சைபர் கிரைம் பிரிவில் அரசு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

தமிழக அரசு வங்கி கணக்கை ஹேக் செய்த கேரள சைபர் கும்பல்.. கருவூலக் கணக்கை முடக்கி ரூ.11 லட்சம் திருட்டு!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Nov 2026 13:48 PM IST

சென்னை, நவ.06: நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் அதேவேளையில், சைபர் குற்றவாளிகளின் கைவரிசையும் பொதுமக்களைத் தாண்டி அரசு நிறுவனங்கள் மற்றும் முக்கியத் துறைகள் வரை நீண்டு வருவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தனிநபர்களை ஏமாற்றி ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் மோசடிகள் அரங்கேறி வந்த நிலையில், தற்போது நேரடியாகத் தமிழ்நாடு அரசின் கருவூல வங்கி கணக்குகளையே குறிவைத்து மர்மக் கும்பல் ஒன்று கைவரிசை காட்டியுள்ளது. நாகை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களின் கணக்குகளை முடக்கி, சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான தொகையை ஆன்லைன் வாயிலாகக் கொள்ளையடித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

கேரள சைபர் குற்றக் கும்பலின் கைவரிசை:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சொந்தமான அரசு வங்கி கணக்கு மற்றும் கருவூல ஆவணங்களை இலக்காக வைத்து இந்த இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் மட்டுமல்லாமல், ராமநாதபுரம் உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களின் வங்கி கணக்குகளும் இதேபோன்று சைபர் கும்பலால் முடக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துல்லியமான இணையவழிக் கொள்ளையின் பின்னணியில் கேரளாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகள் செயல்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிக விவசாயப் பரப்பளவும் பல்வேறு ஊராட்சிகளையும் கொண்டுள்ள மிக முக்கியமான கீழையூர் போன்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கணக்குகளே குறிவைக்கப்பட்டு ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளிடையே கடும் பீதியை உருவாக்கியுள்ளது.

அரசு கணக்குகள் முடக்கப்பட்ட முதல் அதிர்ச்சி:

பொதுவாகச் சைபர் கிரைம் குற்றவாளிகள் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் தனிநபர்களின் ஏடிஎம் எண்கள் அல்லது ஒடிபி (OTP) தகவல்களைப் பெற்றுப் பணத்தைத் திருடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. ஆனால், வரலாற்றில் முதன்முறையாக நேரடியாக மாநில அரசின் அரசுத் கருவூல வங்கி கணக்குகளையே முடக்கிப் பணம் திருடப்பட்டிருப்பது காவல்துறை தரப்பையே அதிரவைத்துள்ளது. அரசின் பலத்த பாதுகாப்புடைய கணக்குகளையே ஊடுருவிப் பணத்தைக் கையாடல் செய்துள்ள விதம், இந்தச் சைபர் கும்பலின் தொழில்நுட்பத் திறமையையும் திட்டமிடலையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. மாநிலத்தின் நிதிப் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் குறித்துப் பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழா.. ஒரே மேடையில் CM விஜய்- நடிகை த்ரிஷா.. மணமக்களுடன் போஸ்!

சைபர் கிரைம் போலீசாரின் தீவிர விசாரணை:

தமிழ்நாடு அரசின் வங்கி கணக்குகளை முடக்கி 11 லட்சம் ரூபாய் வரை திருடப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தரப்பில் சென்னை சைபர் கிரைம் தலைமையகத்திலும் நாகப்பட்டினம் மாவட்டக் காவல் துறையிலும் அதிகாரப்பூர்வமாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை களத்தில் இறங்கியுள்ள சைபர் கிரைம் போலீசார், எந்த ஐபி (IP) முகவரியைப் பயன்படுத்தி இந்தக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன என்பது குறித்தும், கேரளாவைச் சேர்ந்த அந்த மர்மக் கும்பல் யார் என்பது குறித்தும் ரகசியத் தகவல்களைத் திரட்டி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்கான அதிரடி நடவடிக்கைகளில் காவல்துறை இறங்கியுள்ளது.

Follow Us