AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 11 வரை கனமழைக்கு வாய்ப்பு..

Rainfall Alert: இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 11ஆம் தேதியை ஒட்டி புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 13ஆம் தேதியை ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 11 வரை கனமழைக்கு வாய்ப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Nov 2026 07:50 AM IST

நவம்பர் 6, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 29 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் இயல்பை விட 96 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது. அதேசமயம், அக்டோபர் 1 முதல் நவம்பர் 4 வரை ஒட்டுமொத்தமாக நாட்டின் மழைப்பொழிவு இயல்பை விட 30 சதவீதம் குறைவாக உள்ளது.

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான முரசு புயல் ஆந்திர கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கரையைக் கடந்தது. பின்னர் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இதன் தாக்கத்தால் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பதிவானது. தமிழகத்திலும் நவம்பர் 2ஆம் தேதி சில இடங்களில் மிக கனமழை பெய்தது.

நவம்பர் 5 முதல் 11 வரை மழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையத்தின் அடுத்த 7 நாட்களுக்கான முன்னறிவிப்பின்படி, நவம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக,  6ஆம் தேதி ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழா.. ஒரே மேடையில் CM விஜய்- நடிகை த்ரிஷா.. மணமக்களுடன் போஸ்!

நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும். மேலும், நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரையிலும் சில இடங்களில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மீண்டும் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 11ஆம் தேதியை ஒட்டி புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 13ஆம் தேதியை ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இது நவம்பர் 15ஆம் தேதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது புயலாக மாறுமா என்பது குறித்து தற்போது உறுதியான கணிப்பு இல்லை.

மேலும் படிக்க: சிஎம் வீட்டருகே மீட்கப்பட்ட கைக்குழந்தை.. கள்ளக்காதலில் பிறந்ததால் வளர்க்க விருப்பமில்லை.. கல் நெஞ்ச தாய் ஷாக் பதில்!

நவம்பர் 12 முதல் 18 வரை எப்படி இருக்கும்?

இரண்டாவது வாரமான நவம்பர் 12 முதல் 18ஆம் தேதி வரை தென் தமிழகத்தின் சில பகுதிகள் உட்பட தென் தீபகற்ப இந்தியாவில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் கேரளாவிலும் சில நாட்கள் கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த இரண்டு வாரங்களிலும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு நீடிப்பதால் பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைக் கவனித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

Follow Us