தீபாவளிக்கு வாட்ஸ்அப்பில் சூப்பர் அப்டேட்.. ஸ்டேட்டஸுக்கு லைக் கொடுத்தால் பட்டாசு வெடிக்கும்! பயனர்களைக் கவரும் புதிய வசதி!
WhatsApp Diwali Update: வாட்ஸ்அப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட ஸ்டேட்டஸ்களைப் பார்த்து அதற்கு எமோஜிகள் அல்லது மெசேஜ்கள் மூலம் எதிர்வினை தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில், ஸ்டேட்டஸ்களுக்கு லைக் கொடுக்கும் வசதியைப் பயன்படுத்தும்போது, தற்போது தீபாவளிக்கான சிறப்பு பட்டாசு அனிமேஷன் தோன்றும் வகையில் இந்த அப்டேட் அமைந்துள்ளது.
நவம்பர் 6, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிய பண்டிகைக் கால அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு லைக் கொடுக்கும்போது திரையில் பட்டாசுகள் வெடிப்பது போன்ற அனிமேஷன் தோன்றும். தீபாவளிப் பண்டிகையை டிஜிட்டல் முறையிலும் கொண்டாடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக, வாட்ஸ்அப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட ஸ்டேட்டஸ்களைப் பார்த்து அதற்கு எமோஜிகள் அல்லது மெசேஜ்கள் மூலம் எதிர்வினை தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில், ஸ்டேட்டஸ்களுக்கு லைக் கொடுக்கும் வசதியைப் பயன்படுத்தும்போது, தற்போது தீபாவளிக்கான சிறப்பு பட்டாசு அனிமேஷன் தோன்றும் வகையில் இந்த அப்டேட் அமைந்துள்ளது.
ஸ்டேட்டஸில் பட்டாசு அனிமேஷனைப் பெறுவது எப்படி?
இந்த வசதியைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. அதாவது, முதலில் உங்களது வாட்ஸ்அப் செயலியைத் திறந்து Updates (புதுப்பிப்புகள்) பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் பதிவிட்டுள்ள ஸ்டேட்டஸைத் திறந்து, அதில் உள்ள Like பட்டனைத் தட்டினால் போதும். உடனடியாகத் திரையில் பட்டாசுகள் வெடிப்பது போன்ற அனிமேஷன் தோன்றும். இதன் மூலம் வழக்கமான லைக் வசதிக்கு கூடுதல் பண்டிகை உற்சாகம் கிடைக்கிறது.
மேலும் படிக்க: ChatGPT மூலம் உங்கள் புகைப்படத்தை GIF ஆக மாற்றலாம்.. எப்படி?
வாட்ஸ்அப்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டேட்டஸ் லைக் வசதியின் மூலம், ஒருவர் தனது ஸ்டேட்டஸுக்கு யார் லைக் கொடுத்துள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த லைக்குகள் தனிப்பட்ட முறையில் ஸ்டேட்டஸ் பதிவிட்டவருக்கு மட்டுமே தெரியும். மற்ற பார்வையாளர்களால் யார் லைக் செய்தார்கள் என்பதைப் பார்க்க முடியாது.
அப்டேட் செய்ய வேண்டியது அவசியமா?
இந்த புதிய அனிமேஷன் வசதி அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காமல் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படலாம். எனவே, பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஐபோனில் ஆப் ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியின் புதிய பதிப்பு உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே பண்டிகைக் காலங்களில் ஸ்டிக்கர்கள், வீடியோ கால் எஃபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் வசதிகள் மூலம் பயனர்களைக் கவர்ந்து வரும் வாட்ஸ்அப், தற்போது தீபாவளிக்காக அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய முயற்சியும் பயனர்களிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களின் ஸ்டேட்டஸ்களுக்கு சாதாரணமாக லைக் கொடுப்பதற்குப் பதிலாக, பட்டாசு வெடிக்கும் அனிமேஷனுடன் தீபாவளி வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள முடியும்.