AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்.. ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை தொடக்கம்

Vetri Special Vegetable Scheme : தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகளை வழங்கும் வகையில், தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் 'வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு திட்டம் நவம்பர் 5, 2026 இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்தார்.

தீபாவளிக்கு ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்.. ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை தொடக்கம்
அமைச்சர் காந்திராஜ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Nov 2026 11:59 AM IST

சென்னை, நவம்பர் 5 : தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகளை வழங்கும் வகையில், தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு திட்டம் நவம்பர் 5, 2026 இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் (Minister Gandhiraj) தொடங்கி வைத்தார்.

இந்த வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவம்பர் 5, 2026 இன்று தொடங்கி நவம்பர் 7, 2026 சனிக்கிழமை வரை மாநிலம் முழுவதும் 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

இதையும் படிக்க : சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

தீபாவளிக்கு தமிழக அரசின் வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு திட்டம்

தமிழ்நாட்டில் வருகிற நவம்பர் 8, 2026 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொதுமக்களின் அன்றாட செலவுகளை குறைக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கூட்டுறவுத்துறை சார்பில் ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அன்றாடச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 10 வகையான காய்கறிகள் மற்றும் பொருட்கள் ஒரே தொகுப்பாக ரூ.100க்கு வழங்கப்படுகின்றன.

சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனையை முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது, பொதுமக்களுக்கு காய்கறித் தொகுப்புகளை நேரடியாக வழங்கிய அமைச்சர், சிறப்பு விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார்.

மேலுயில் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் கூட்டுறவு அங்காடிகளுக்கு நேரடியாகச் செல்ல முடியாத பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் காய்கறித் தொகுப்புகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள் 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு அங்காடிகள் மூலம் இந்தத் தொகுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதையும் படிக்க : இனி ஒரு மணி நேரத்தில் பத்திரம்! STAR 3.0 திட்டத்தில் 4 வகையான ஆவணங்களுக்கு புதிய நடைமுறை!

ரூ.100க்கு 10 காய்கறிகள்

தமிழக அரசின் வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான 10 வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

1. பெரிய வெங்காயம் – 500 கிராம்
2. தக்காளி – 500 கிராம்
3. கத்தரிக்காய் – 250 கிராம்
4. உருளைக்கிழங்கு – 250 கிராம்
5. கேரட் – 200 கிராம்
6. பீன்ஸ் – 200 கிராம்
7. பச்சை மிளகாய் – 100 கிராம்
8. எலுமிச்சை – 100 கிராம்
9. இஞ்சி – 50 கிராம்
10. தேங்காய் – 400 முதல் 450 கிராம்

ஒரு நபருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் ரூ.100க்கு கூடுதலாக வசூலிக்கக்கூடாது எனவும் விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us