AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சாட்ஜிபிடி மருத்துவ ஆலோசனையால் பெண் உயிரிழந்ததாக புகார்.. ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு!

ChatGPT Medical Advice Controversy : செயற்கை நுண்ணறிவு கருவியான சாட்ஜிபிடி வழங்கிய மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றியதால் 31 வயது பெண் உயிரிழந்ததாக கூறி, அவரது பெற்றோர் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சாட்ஜிபிடி மருத்துவ ஆலோசனையால் பெண் உயிரிழந்ததாக புகார்.. ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Nov 2026 21:20 PM IST

செயற்கை நுண்ணறிவு கருவியான சாட்ஜிபிடி வழங்கிய மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றியதால் 31 வயது பெண் உயிரிழந்ததாக கூறி, அவரது பெற்றோர் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். வலிப்பு நோய்க்காக எடுத்துவந்த மருந்துகளை நிறுத்துவது தொடர்பாக சாட்ஜிபிடி தவறான ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வப் பொறுப்புகள் குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாட்ஜிபிடி மருத்துவ ஆலோசனையால் விபரீதம்

குறிப்பாக, சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் மருத்துவர்களுக்கு மாற்றானவை அல்ல என்ற எச்சரிக்கை வாசகத்தை வெளியிடுவது மட்டும் போதுமானதா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயதான போவன் வான் என்ற பெண்ணின் பெற்றோர், கடந்த 2026 அக்டோபர் மாதம் ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வழக்கில், சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் முறையான மருத்துவ உரிமம் இல்லாமல் மருத்துவ ஆலோசகரைப் போன்று செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சீனா அறிமுகம் செய்த புதிய பாம்பு ரோபோட்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. வியக்க வைக்கும் புதிய படைப்பு!

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த போவன் வான், அதற்காக தொடர்ந்து மருந்துகளை எடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் பயன்படுத்தி வந்த அத்தியாவசிய மருந்துகளின் அளவைப் படிப்படியாக குறைத்து நிறுத்துவதற்கான பிளானை சாட்ஜிபிடி வழங்கியதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பிளான் குறித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் சாட்ஜிபிடி அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஆலோசனைகள் அவரது உடல்நலத்திற்குக் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியதாகவும், அவரது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மருத்துவர்களின் ஆலோசனையை புறக்கணிக்க சொன்ன சாட்ஜிபிடி?

இந்த வழக்கில் , சாட்ஜிபிடிமருத்துவர்களின் ஆலோசனையைப் புறக்கணிக்கத் தூண்டியதாக கூறப்படுவதுதான் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. பொதுவாக வலிப்பு நோய்க்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை மருத்துவரின் கண்காணிப்பின்றி திடீரென நிறுத்துவதோ அல்லது அளவைக் குறைப்பதோ கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

அதேநேரத்தில், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டவை அல்ல.ஓபன் ஏஐ நிறுவனத்தின் சட்டப்பூர்வப் பொறுப்பு குறித்த இறுதி முடிவும் வெளியாகவில்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எந்த அளவிற்குப் பொறுப்பு உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் விவாதங்களில் இந்த வழக்கு முக்கிய இடம் பெறக்கூடும்.

இதையும் படிக்க : உங்கள் பழைய “Black and White” புகைப்படத்தை கலராக மாற்றலாம்.. ChatGPT-ல் இதை செய்தாலே போதும்!

குறிப்பிட்ட நோய்க்கான மருந்தைத் தேர்வு செய்வது, மருந்தின் அளவை மாற்றுவது அல்லது சிகிச்சையை நிறுத்துவது போன்ற முடிவுகளைச் செயற்கை நுண்ணறிவு வழங்கும் தகவல்களை மட்டும் நம்பி எடுக்கக் கூடாது.

குறிப்பாக, வலிப்பு நோய், இதய நோய், நீரிழிவு மற்றும் பிற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை நிறுத்துவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

Follow Us