AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசின் உத்தரவை மீறியதால் நடவடிக்கை.. 3 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் விக்னேஷ்!

TASMAC Employees Suspended : தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறு பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்காம ல் இருந்ததாக கூறி 3 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்து உள்ளார் .

அரசின் உத்தரவை மீறியதால் நடவடிக்கை.. 3 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் விக்னேஷ்!
அமைச்சர் விக்னேஷ்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Nov 2026 21:51 PM IST

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வார இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை அடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடையை அடைத்த காரணத்துக்காக தற்போது வரை 3 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,040 சில்லறை விற்பனை கடைகளில் 460 கடைகள் மட்டுமே இன்று அடைக்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்

மேலும், அரசின் உத்தரவை மீறி கடைகளை அடைத்தவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் நிர்வாக ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முறைகளாக சென்ற பணத்தை சீரமைக்கவே மதுபானங்களுக்கான எம்ஆர்பி விலையில் ரூ. 10 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் முடிவுகளுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ. 10 எம்ஆர்பி விலையில் வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: காங்கிரஸை பகைத்தால் முதல்வர் பதவி பறிபோகும் என்ற அச்சமா? மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்யை வெளுத்த நயினார்!

3 டாஸ்மாக ஊழியர்கள் பணியிடை நீக்கம்

இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், 3 டாஸ்மாக் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒரு மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்த பணம் எங்கு செல்கிறது என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.  இதற்கு, தமிழக அரசு மதுபானங்களை இறக்கும் கூலி மற்றும் டாஸ்மாக் கடைகளில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வசூல் செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு

இதற்கு அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தான் தற்போது மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுவதாகவும், அதனை எம்ஆர்பி விலையில் சேர்த்து வசூல் செய்யப்படுவதாகவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருவதாக தெரிகிறது.

மேலும் படிக்க: இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார்.. எதிர்க் கட்சிகளுக்கு அதிமுக டஃப் கொடுக்கும்.. எடப்பாடி கே. பழனிசாமி!

Follow Us