அண்ணிக்கு மரியாதை.. ஜோதிகாவின் சொல்பேச்சை கேட்ட கார்த்தி – வைரலாகும் வீடியோ!
Jyotika And Karthi Viral Video: தென்னிந்திய மக்கள் மத்தியில் நடிகராக மிகவும் பிரபலமானவர் கார்த்தி. இவர் சமீபத்தில் நடைபெற்றிருந்த சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச்சில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர். அங்கு ஜோதிகா மற்றும் கார்த்தி இருவரும் செய்த செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அது குறித்து வைரலாகும் வீடியோ குறித்து பார்க்கலாம்.
நடிகர் கார்த்தி (Karthi) தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் சர்தார் 2 (Sardar 2). இந்த படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தியின் நடிப்பில் தொடர்ந்து கிட்டத்தட்ட 3 படங்கள் உருவாகிவருகிறது. இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் (Marsal Movie) படமும், தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து பேக் டூ பேக் படங்களை வைத்துள்ளார். அந்த விதத்தில் இந்த படங்களின் ஷூட்டிங்கிலும் அவர் பிசியாக இருந்துவருகிறார்.
அந்த பிசியிலும் இவர் சமீபத்தில் நடைபெற்றிருந்த சூர்யாவின் (Suriya) சீன் திரைப்படத்தின் ட்ரெய்லர் & ஆடியோ லான்ச்-சில் கலந்துகொண்டிருந்தனர். அப்போது இருக்கையில் அமரும்போது ஜோதிகாவும் (Jyotika), கார்த்தியும் செய்த செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பக்கா என்டேர்டைமென்ட்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஃபன் மேக்கிங் வீடியோவை பகிர்ந்த படக்குழு!
இருக்கையில் அமர்வதற்கு கார்த்தி மற்றும் ஜோதிகா செய்த செயல் :
இந்த வீடியோவில், கார்த்தி மேடையில் பேசிவிட்டு கீழே அமர்வதற்கு வந்தார். அப்போது ஜோதிகாவும் அவரின் இருக்கையில் உட்காரவில்லை. சூர்யா தனியாக ஒருபக்கத்தில் அமர்ந்திருந்த நிலையில், அவரின் அருகே ஒரு இருக்கை இருந்தது. அது ஜோதிகா அமர்வதற்கு அமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த இருக்கையில் கார்த்தியை சென்று அமருமாறு ஜோதிகா செய்த விஷயம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த கியூட் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன் பட கதை குறித்து ஆன்லைனில் பரவும் கருத்து.. நச் பதில் கொடுத்த இயக்குநர் ஜித்து மாதவன்!
இணையத்தில் வைரலாகும் கார்த்தி மற்றும் ஜோதிகா குறித்த வீடியோ பதிவு:
#Jyothika Forcing #Karthi to Sit Near #Suriya..❣️ Suriya and Karthi’s Reaction..👌😃 https://t.co/JkKlEvP3DH
— Laxmi Kanth (@iammoviebuff007) November 1, 2026
நடிகர் சூர்யாவின் நடிப்பில் 2026ம் ஆண்டில் 3வது படமாக வெளியாக காத்திருக்கும் படம்தான் சீன். இப்படத்தை ஜித்து மாதவன் இயக்க, சூர்யா, நஸ்ரியா, நஸ்லேன் மற்றும் பல்வேறு திரைப் பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், சிறப்பாக அமைந்தது. இப்படம் 2026 ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.