AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பக்கா என்டேர்டைமென்ட்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஃபன் மேக்கிங் வீடியோவை பகிர்ந்த படக்குழு!

Mookuthi Amman 2 Movie BTS Video: தமிழ் சினிமாவில் 2026ம் ஆண்டில் மாபெரும் தெய்வீக திரைப்படமாக அமைந்துள்ளதுதான் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து BTS வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

பக்கா என்டேர்டைமென்ட்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஃபன் மேக்கிங் வீடியோவை பகிர்ந்த படக்குழு!
மூக்குத்தி அம்மன் 2 BTS வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Nov 2026 16:53 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச ஸ்டார் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியான படம் ஹாய் (Hi Movie). இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் 2026ம் ஆண்டில் நயன்தாராவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த திரைப்படங்களில் ஒன்றுதான் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2). இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் மற்றும் போலீஸ் அதிகாரி என இரு வேடங்களில் நடித்துள்ளார்.

அந்த விதத்தில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது… சுட சுட தயாராகும் அப்டேட் – வைரலாகும் பதிவு!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து வெளியான BTS வீடியோ குறித்த எக்ஸ் பதிவு:

மூக்குத்தி அம்மன் 1 படத்திற்கும் பார்ட் 2 படத்திற்கும் தொடர்பு உண்டா?:

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் மூக்குத்து அம்மன் 2. இந்த படத்தில் நயன்தாரா, ஊர்வசி, சிங்கம்புலி, சுனில், மைனா நந்தினி மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் இப்படத்தில் கேமியோ வேடத்தில் சினேகா மற்றும் குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளாராம். 2020ல் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் மூக்குத்து அம்மன் 1 படமானது வெளியானது. இப்படமானது கலக்கல் காமெடி மற்றும் பக்தி உள்ளிட்ட சிறப்பான கதையில் வெளியாகியிருந்தது.

இதையும் படிங்க: சீன் பட கதை குறித்து ஆன்லைனில் பரவும் கருத்து.. நச் பதில் கொடுத்த இயக்குநர் ஜித்து மாதவன்!

அந்த படத்திற்கு பின் தற்போது மூக்குத்து அம்மன் 2 படமானது உருவாகியுள்ள நிலையில், 2026 நவம்பர் 6ம் தேதியில் வெளியாகிறது. அந்த விதத்தில் இப்படம் மூக்குத்தி அம்மன் 1 படத்தின் தொடர்ச்சியா என கேள்விகள் எழும்பிவருகிறது. ஆனால் இப்படம் முற்றிலும் வேறு கதையை கொண்டே இயக்கப்பட்டுள்ளதும். மூக்குத்தி அம்மன் பாகம் 1-க்கும் பாகம் 2-க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us