மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வெளியானது அப்டேட்
Mookuthi Amman 2 Movie Tamil Nadu Release Rights | தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் நடிகை நயன்தாரா நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து அந்த மாதிரியான படங்களில் நடித்து வந்த நயன்தாரா சற்று தோல்வியை சந்தித்த பிறகு மீண்டும் நாயகன்களுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார்
நடிகை நயன்தாரா முன்னணி வேடங்களில் நடித்த படங்களில் ஒன்றுதான் மூக்குத்தி அம்மன். இந்தப் படம் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்தார். அந்தப் படம் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு காரணம் அந்தப் படம் மிகவும் பிரமாண்டமாக இல்லாமல் கடவுளை இயல்பாக காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




மூக்குத்தி அம்மன் 2 பட ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை என்று தெரிவித்தார். அதன் காரணமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்க ஒப்பந்தம் ஆனார். முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நடிகை நயன்தாரா தான் இரண்டாம் பாகத்திலும் அம்மனாக நடித்து உள்ளார். இந்தப் படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் தமிழ் நாட்டு ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Also Read… Vrushakarma: இன்னும் 50 நாட்களில்.. நாக சைதன்யாவின் விருஷகர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மூக்குத்தி அம்மன் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy to announce @redgiantmovies_ as the Tamil Nadu distributor of #MookuthiAmman2 🔱
A @sundarcoffl Mega Divine Entertainer
#MookuthiAmman2FromNov6
@IshariKGanesh @VelsFilmIntl #Nayanthara @khushsundar #VigneshShivan @AvniCinemax_ @Rowdy_Pictures @kushmithaganesh #AnanditaSundar @hiphoptamizha @gopiamar @FennyOliver @ReginaCassandra @iYogiBabu @suneeltollywood @Officialsalaga @mgabhinaya @Venkatt_Ragavan @ivyofficial2023 @B4UMotionPics @RajaS_official @Inban_U @UrsVamsiShekar @propratheesh @teamaimpr @proyuvraaj @AAFilmsIndia @MythriOfficial @KvnProductions @asianet @velsmusicintl @vijaytelevision @JioHotstar @kav_pandian @thetabsofficial
— Vels Film International (@VelsFilmIntl) October 16, 2026
Also Read… கரீஷ்மாவின் டைமென்ட்… போட்டியாளர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட டிடிஃஎப் வாசன் – ப்ரோமோ!