AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
திருப்பதிக்கு 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய சென்னை தொழிலதிபர்

திருப்பதிக்கு 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய சென்னை தொழிலதிபர்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Nov 2026 15:41 PM IST

சென்னையைச் சேர்ந்த வர்த்தமான ஜெயின் தொழிலதிபர் குடும்பம் ஒன்று, ரூ.200 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 121 கிலோ தங்க ஆபரணங்களை இறைவனுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளது. இதனையடுத்து நவம்பர் 27, 2026 நாளை முதல் இறைவன் இந்த புதிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுவார்.

திருப்பதியில் உள்ள உலக பிரசிதித்தி பெற்ற திருமலை வேங்கடேசப் பெருமானின் பக்தர்கள் பல்வேறு வழிகளில் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர். சிலர் பணமாகவும், சிலர் தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களாகவும் காணிக்கைகளை வழங்குகின்றனர். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த வர்த்தமான ஜெயின் தொழிலதிபர் குடும்பம் ஒன்று, ரூ.200 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 121 கிலோ தங்க ஆபரணங்களை இறைவனுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளது. வர்தமான் ஜெயின் குடும்பத்தினர் இறைவனுக்கு இத்தகைய பங்களிப்பை வழங்குவது இது முதன்முறையல்ல. இந்த 2026 ஆண்டு மே 16 அன்று, அவர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு மின்சாரப் பேருந்தை வழங்கியிருந்தனர். தற்போது, ​​121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கியதன் மூலம், அவர்கள் மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இதில் இறைவனுக்கான கிரீடம், ஒட்டியாணம், தோள் ஆபரணங்கள், சங்கு, சக்கரம் மற்றும் அபய ஹஸ்தம் போன்றவை அடங்கும்.  இந்த பிரம்மாண்டமான நன்கொடை, இறைவனின் மீது அந்த குடும்பத்தினர் கொண்டுள்ள அளப்பரிய பக்தியை பறைசாற்றுகிறது. இதனையடுத்து நவம்பர் 27, 2026 நாளை முதல் இறைவன் இந்த புதிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுவார்.

Published on: Nov 26, 2026 03:41 PM
Follow Us