AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மோகன்லாலின் காட்சிகளை நீக்குவது தேவையற்றது.. ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் பதிவு!

Mohanlal scene Cut: 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஜெயிலர் 2. இந்த படமானது இன்று (15/10/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கியமான வேடத்தில் நடித்த நிலையில், இவரின் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து அவரின் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் பதிவை வெளியிட்டுள்ளார்.

மோகன்லாலின் காட்சிகளை நீக்குவது தேவையற்றது.. ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் பதிவு!
ஜெயிலர் 2 மோகன்லால் காட்சிகள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Oct 2026 20:25 PM IST

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் தமிழில் பல பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் இயக்கத்தில் இன்று (15/10/2026) தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) முன்னணி நட்சத்திர நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருடன் நடிகர்கள் சிவராஜ்குமார் (Shivarajkumar), மோகன்லால் (Mohanlal), சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்த அசத்தியிருந்தனர். இந்த படமானது இன்று உலகமெங்கும் ரிலீஸாகியிருந்த நிலையில், மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. முதல் நாளிலே அணைத்து திரையரங்குகளிலும் 5 காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக திரையிடப்பட்டுவருகிறது.

அந்த விதத்தில் இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் காட்சிகள் சுருக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துவருகிறது. இதற்கு மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் (Jishad Shamsudeen) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: இன்னும் 50 நாட்களில்.. நாக சைதன்யாவின் விருஷகர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் இன்ஸ்டாகிராம் பதிவு:

இந்த பதிவில் அவர், “ஜெயிலர் 2′ வெளியானதையொட்டி, ஒரு முக்கியமான தகவலைப் பகிர விரும்புகிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளின் அடிப்படையில், டிரெய்லரில் வெறும் 2 வினாடிக் காட்சியாகக் குறைக்கப்பட்டபோதும், எங்கள் வேலையின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஆனால், படம் வெளியானதும், மோகன்லால் சாரின் மூன்று தனித்துவமான தோற்றங்கள் முழுவதுமாக நீக்கப்பட்டன, அந்த டிரெய்லர் காட்சியும் கூட வெட்டிச் சுருக்கப்பட்டது. சினிமாவில் எனது அனுபவத்தின்படி, மோகன்லால் சார் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்டிச் சுருக்குவது தேவையற்றது “என அந்த பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே… 22 ஆண்டுகளைக் கடந்தது 7ஜி ரெயின்போ காலனி படம்!

தற்போது இது குறித்த பதிவானது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் நடிகர் மோகன்லாலின் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் கண்டிப்பை ஏற்படுத்திவருகிறது. அவரின் காட்சிகள் ஜெயிலர் 2 படத்தில் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us