உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே… 22 ஆண்டுகளைக் கடந்தது 7ஜி ரெயின்போ காலனி படம்!
22 Years Of 7G Rainbow Colony | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற 7ஜி ரெயின்போ காலனி படம் இன்றுடன் 22 ஆண்டுகளைக் கடந்தது.
தமிழ் சினிமாவில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்களையும் ரசிகர்கள் தற்போதும் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வந்த இயக்குநர் செல்வராகவன் (Director Selvaraghavan) இடையில் சிறிது காலம் படங்களை இயக்குவதை விட்டுவிட்டு தொடர்ந்து படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்தார். இப்படி இருக்கும் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களை இயக்கி வருகிறார் இயக்குநர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் முன்னதாக மாபெரும் வரவேற்பைப் பெற்ற 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைப்பெற்று வரும் அதே வேலையில் மெண்டல் மனதில் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த இரண்டு படங்களில் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படம் இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
22 ஆண்டுகளைக் கடந்தது 7ஜி ரெயின்போ காலனி படம்:
அதன்படி ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி இருந்த இந்தப் படத்தில் நடிகர்கள் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் இருவரும் நாயகன் நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடலாசிரியர் நா முத்துகுமார் வரிகளில் பாடல்களை இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூபப்ர் டூப்பர் ஹிட் அடித்தது.




Also Read… கலகலப்பாக வெளியானது கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் டீசர்!
அது மட்டும் இன்றி தற்போதும் இந்தப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் இன்று 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படக்குழு மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம்? மக்களின் விமர்சனம் இதோ!