AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் அவினாஷ் – ஜேசன் இடையே முற்றிய வாக்குவாதம்… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 10-வது வாரத்தில் ஒரே நேரத்தில் இரண்டு டாஸ்குகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போட்டியாளர்கள் இடையே போட்டியும் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது.

பிக்பாஸில் அவினாஷ் – ஜேசன் இடையே முற்றிய வாக்குவாதம்… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2026 10:41 AM IST

தமிழ் சின்னத்திரையில் தற்போது அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமி சீசன் 10. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டும் இன்றி காமென் மேன்களும் கலந்துகொண்டு தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் எஞ்சி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து போட்டியாளர்களிடையே போட்டி மனப்பான்மை என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது 5 வாரங்கள் முடிவடைந்து 6-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான டாஸ்கும் போட்டியாளர்களிடையே விறுவிறுப்பாக செல்கின்றது.

இதுவரை மொத்தம் 5 வாரங்களிலும் வாரத்திற்கு ஒரு டாஸ்க் வீதம் நடைப்பெற்று வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது 6-வது வாரத்தில் இரண்டு டாஸ்குகளுடன் சென்று கொண்டு இருக்கின்றது. அதில் ஒன்று டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க் மற்றும் ஒன்று டான்ஸ் மாரத்தான். அந்த டைமண்டை திருடும் டாஸ்கை போட்டியாளர்கள் தனியாகவோ அல்லது கூட்டணி சேர்ந்தோ பண்ணலாம். அதே போல இந்த டான்ஸ் மாரத்தான் டாஸ்கில் போட்டியாளர்கள் இரண்டு இரண்டு நபர்களாக பிரிந்து ஆட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் அவினாஷ் – ஜேசன் இடையே முற்றிய வாக்குவாதம்:

இந்த டாஸ்குகள் தொடங்கி தொடர்ந்து ரசிகர்களிடையே மட்டும் இன்றி போட்டியாளர்கள் இடையேயும் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 38-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கரிஷ்மா டைமண்ட் பாக்ஸை திறக்க அவர் ஏன் அப்படி செய்கிறார் என்று அவினாஷ் கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஜேசன் இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு யார் எங்கு வேணும்னாலும் சென்று இருக்க உரிமை இருக்கு என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுவது அந்த வீடியோவைப் பார்க்கையில் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மண்டாட்டி பட வில்லனின் புதுப் படம்… வாழ்த்து சொன்ன சூரி – வைரலாகும் பதிவு

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… எஸ்கே 27 படத்தில் இசையமைப்பாளராக இணைந்த சாய் அபயங்கர் – மகிழ்ச்சி தெரிவித்த சிவகார்த்திகேயன்!

Follow Us