எஸ்கே 27 படத்தில் இசையமைப்பாளராக இணைந்த சாய் அபயங்கர் – மகிழ்ச்சி தெரிவித்த சிவகார்த்திகேயன்!
Actor Sivakarthikeyan X post viral on social media | நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது படத்தில் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளார். இந்த நிலையில் அதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Music Director Sai Abhyankar). இவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு இண்டிபெண்டட் இசைக் கலைஞராக வலம் வந்தார். அதன்படி இவர் தானே பாடல் எழுதி இசையமைத்து அந்த பாடலுக்கு நடிக்கவும் செய்து வெளியிட்டு வந்தார். தொடர்ந்து இவர் இசையில் அப்படி வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து சாய் அபயங்கர் மலையாள சினிமாவில் வெளியான பல்டி என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரிசையாக படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் பலப் படங்கள் தன் கைவசம் வைத்துள்ளார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவரது இசையில் வெளியாகும் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க தொடர்ந்து ஒப்பந்தம் ஆகி வருகிறார். அந்த வகையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதன்படி சிவகார்த்திகேயன் 27-வது படத்திற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்கே 27-ல் இணைந்த சாய் அபயங்கர் – மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்:
இந்த நிலையில் இது தொடர்பான அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, தம்பி, உங்களை இதில் இணைத்துக்கொள்வதில் மிகுந்த உற்சாகம்! இந்த முதல் நாள் முதல் காட்சி (FDFS) உங்கள் இசையுடன் அமையப்போகிறது என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்க் எப்போது? வைரலாகும் தகவல்
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thambi 🫂❤️ Super excited to have you on board! This FDFS is going to be 🔥 with your music!
#SK27— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 13, 2026
Also Read… ஜெயிலர் 2 படத்திலிருந்து அந்த நடிகர்களின் காட்சிகள் நீக்கப்பட்டதா? வைரலாகும் தகவல்



