SK27: சிவகார்த்திகேயனின் SK27 படத்தில் இசையமைப்பாளராக இணைந்த சாய் அபயங்கர்!
SK27 Movie Update: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தொடர்ந்து புதிய படங்கள் உருவாகிவருகிறது. இதில் இவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 27வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது. இது தற்போது இணையத்தில் பரவிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). சின்னத்திரையில் தொகுப்பாளர் மற்றும் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக இருந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு இவரின் நடிப்பில் உருவாகிவரும் படம் சேயோன் (Seyon). இதை தாய்கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் புதிய படத்தில் இணைந்துள்ளார். பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் (Ramkumar Balakrishnan) இயக்கத்தில் SK27 என்ற படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அது என்ன என விரிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்
சிவகார்த்திகேயனின் SK27 திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து வெளியான முக்கிய அப்டேட்:
Sai. Sound. Sensation 🔥
#SK27 is a SAI ABHYANKKAR Musical – the very first union of @Siva_Kartikeyan and @SaiAbhyankkar.
A musical celebration like never before awaits you!
A film by @ImRamkumar_B.
Produced by @SathyaJyothi.@11Lohar @omdop #TGThyagarajan #SendhilThyagarajan @arjun1on @saisiddharth_ @kalaivananoffl #ARajesh @PraveenRaja_Off #StevenKumar @teamaimpr @pro_barani @TheMugDigital
— Sathya Jyothi Films (@SathyaJyothi) October 12, 2026
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேங்ஸ்டராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR49 படத்தில் ஒப்பந்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் தற்போது SK27 படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் SK27 படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இறுதிமுதல் தொடங்கிய நிலையில், சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும், கேங்ஸ்டராகவும் நடிக்கிறாராம்.
இதையும் படிங்க: வட சென்னை 2 படம் எப்போது தொடங்கும்? இயக்குநர் வெற்றிமாறன் ஓபன் டாக்!
இது சிலம்பரசனுக்கு சொல்லப்பட்ட STR49 படத்தின் கதைதான் என வட்டாரங்கள் கூறுகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. சிவகார்த்திகேயனின் சேயோன் படமானது 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெளியாகும் நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு கோடைகாலத்திற்குப் பிறகு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த விதத்தில் இதன் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.