முதல் முறை இங்கு நீ இன்றி நடக்கிறேன் தனியாக… 14 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் மாற்றான் படம்!
14 Years Of Maattrraan Movie | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்து இருந்த படம் மாற்றான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் மொழியில் இதுவரை 46 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் அவ்வபோது படங்களில் இரட்டை வேடங்களிலும் நடித்து வந்தார். அப்படி அவர் இரட்டை வேடத்தில் ஒட்டிப் பிறந்தவர்களாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படம் மாற்றான். இந்தப் படம் கடந்த 12-ம் தேதி அக்டோபர் மாதம் 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் கே.வி.ஆனந்த் இந்தப் படட்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து உள்ள இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் காஜல் அகர்வால், தாரா, சச்சின் கெடேகர், இரினா மாலேவா, ரவி பிரகாஷ், ஜூலியா ப்ளீஸ், சங்கர் கிருஷ்ணமூர்த்தி, சென்ட்ராயன், அஜய் ரத்னம், விவேக், கிருஷ்ணமூர்த்தி, நிவின், குமார் நடராஜன் மற்றும் இஷா ஷர்வானி ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போலா இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
14 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் மாற்றான் படம்:
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த நிலையில் படம் இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… டோரதி பட ஹிட்… சனந்த் மற்றும் ரிஷிகாந்த்துக்கு வாழ்த்து மடலை அனுப்பிய சியான் விக்ரம்!
மாற்றான் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#14YearsOfMaattrraan 💥💥
#KalpathiSAghoram
#KalpathiSGanesh
#KalpathiSSuresh
@archanakalpathi @aishkalpathi@Suriya_offl @MsKajalAggarwal
#DirectorKVAnand @Jharrisjayaraj@Ags_production https://t.co/S6JseGnNbL
— AGS Entertainment (@Ags_production) October 12, 2026



