டோரதி பட ஹிட்… சனந்த் மற்றும் ரிஷிகாந்த்துக்கு வாழ்த்து மடலை அனுப்பிய சியான் விக்ரம்!
Chiyaan Vikram Praises Dorothy: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் டோரதி. இந்த படத்தில் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவருமே முன்னணி வேடத்தில் நடித்து, ரசிகர்களால் ரசிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து சொல்லும் விதத்தில் சியான் விக்ரம், பூங்கோத்து மற்றும் லெட்டரை எழுதி அனுப்பியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 25ம் தேதியில் வெளியாகிய திரைப்படம்தான் டோரதி (Dorothy). இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் ரிஷிகாந்த் (Rishikanth) மற்றும் சனந்த் (Sananth) இருவருமே முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமானது கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக கடந்த 2026ம் ஆண்டு தொடக்கத்திலே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்திருந்தார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது மிகவும் சிறப்பாகவே அமைந்திருந்தது. இந்த படமானது வெளியான ஆரம்பத்தில் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுவந்த நிலையில், பின் பல பிரபல இயக்குநர்களாலும் பாராட்டப்பட்டது.
அந்த விதத்தில் இப்படத்திற்கு தற்போது சினிமாவில் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு நட்சத்திரங்களும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் நடிகர் சியான் விக்ரமும் (Chiyaan Vikram) பாராட்டி நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த்திற்கு பூங்கொத்து மற்றும் வாழ்த்து மடலை அனுப்பியுள்ளார்.




இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள சூரியின் மண்டாட்டி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
விக்ரம் வாழ்த்தியது குறித்து நடிகர் சனந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Thank you so much GANDHIPAA! ❤️😍
@chiyaan
Will always make you proud 😇– ROCKY
#Dorothy
#DorothyWinsHearts
#DorothyTheCinemaTheChange https://t.co/is4d636Pa5— Sananth (@Sananth__) October 11, 2026
இந்த பாதியில் சனந்த், “மிகவும் நன்றி காந்திபா, நான் உங்களை எப்போது பெருமைப்படுத்துவேன்” என அந்த பதிவில் சனந்த் தெரிவித்திருந்தார். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
விக்ரம் வாழ்த்தியது பற்றி நடிகர் ரிஷிகாந்த் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இந்த பதிவில் நடிகர் ரிஷிகாந்த், “உங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி, மேலும், தொலைபேசியில் நீங்கள் பேசிய அத்தனை வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சார். உங்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு, இது எனக்கு மிகவும் முக்கியமானது” என அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் 2 பட FDFS எப்போது தெரியுமா?
இந்த டோரதி படமானது நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படமானது இரு சிறுவயது நண்பர்கள் மற்றும் திருநங்கைகளின் வாழ்க்கை முறையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது. அதனால் இப்படத்திற்கு பல்வேறு மக்கள் மத்தியிலும் ஆதரவு அதிகமாக இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.