பவர் ஹவுஸ் படத்தில் ரியா ஷிபுவின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?
Actress Riya Shibu Character in Power House movie | சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நடிகையாக கலக்கி வருகிறார் நடிகை ரியா ஷிபு. இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரியா ஷிபு. இவர் இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் தொடர்ந்து தயாரிப்பாளராக படங்களை தயாரித்து வந்தார். தொடர்ந்து சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வந்த நடிகை ரியா ஷிபு கடந்த 2024-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து மலையாள மொழியில் நடித்து வந்த நடிகை ரியா ஷிபு நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது சர்வம் மாயா படம். நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ரியா ஷிபு தமிழ் சினிமாவில் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து அவர் தமிழ் மொழியில் நடிக்கும் படம் தொடர்பான அப்டேட் வெளியாகி வந்தது. அந்த வகையில் அவர் தமிழ் சினிமாவில் நடிகர் சியான் விக்ரமின் 63-வது படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.




பவர் ஹவுஸ் படத்தில் ரியா ஷிபுவின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?
இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சியான் 63 படத்தின் டைட்டில் டீசரைப் படக்குழு வெளியிட்டது. அதன்படி படத்திற்கு பவர் ஹவுஸ் என்று பெயர் வைத்துள்ளனர். அந்த டைட்டில் டீசரில் நடிகர் விக்ரமை நடிகை ரியா ஷிபு சித்தா என்று கூறுகிறார். இதன் காரணமாக அவர் விக்ரமின் அண்ணன் மகளாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த டைட்டில் டீசர் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… நண்பேண்டா மொமண்ட்… அஜித் உடன் ரேஸ் காரில் பயணித்த முதலமைச்சர் விஜய் – வைரலாகும் வீடியோ
பவர் ஹவுஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The responses are ROARING 🔥#PowerHouse takes off with exciting reactions from fans and audiences!
Title Announcement Promo ▶️ https://t.co/GlEKyhzm2A@SathyaJyothi @chiyaan @anandshank @Music_Santhosh @riyashibu_ @RDRajasekar @arjun1on @saisiddharth_ @shankaruppusamy… pic.twitter.com/pqa5y0FaKs
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 15, 2026
Also Read… உலக அளவில் ரூபாய் 65 கோடிகளை வசூலித்தது மண்டாட்டி – கொண்டாடும் படக்குழு