பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே அழுகையா… வைரலாகும் நடிகை ஆனந்தியின் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று இரண்டாவது வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்தார் நடிகை ஆனந்தி அஜய். இவர் உள்ளே வரும் போதே சிரித்துக்கொண்டு வந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் அழுகும் வீடியோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு முதல் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில் மொத்தம் 19 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அதில் 16 போட்டியாளர்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை, சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களும் 3 பேர் காமென் மேன்களாக உள்ளே அனுப்பட்டனர். இவர்கள் காமென் மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதில் வெற்றிப் பெற்று உள்ளே வந்தனர். இப்படி தொடங்கிய முதல் வாரம் தொடர்ந்து பல போட்டிகளால் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்து நடிகர் ப்ளாக் பாண்டி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வெளியேற அவருக்கு பதிலாக காமென் மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிகண்டன் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார்.
மேலும் இந்த வாரம் தொடக்கமான இன்று திங்கள் கிழமையே இரண்டாவது வைல்கார்ட் போட்டியாளரை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வீட்டிற்குள் அனுப்பினர். அதன்படி நடிகை ஆனந்தி அஜய் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ளே அனுப்பப்பட்டார். உள்ளே வந்ததும் மகிழ்ச்சியாக இருந்த நடிகை ஆனந்தி இரண்டாவது வீடியோவிலேயே அழுதுகொண்டு இருப்பது வைரலாகி வருகின்றது.




பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே அழுகையா:
அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்ட இரண்டாவது புரோமோ வீடியோவில் டெமோகிராசி அறையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதில் ஆனந்தி கமெண்ட் கொடுப்பதாக நினைத்து வாய் விட்டநிலையில் அவரை கண்டித்து மற்ற போட்டியாளர்கள் பேசினர். அப்போது கண்கலங்கியபடி மற்றவர்களிடம் மண்ணிப்பு கேட்ட ஆனந்தி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day8 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/blbQtjyle8
— Vijay Television (@vijaytelevision) September 14, 2026
Also Read… டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போகிறதா? வைரலாகும் தகவல்