AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பல ஆண்டுகள் நட்பு.. அஜித் குமாரை சந்தித்த முதல்வர் விஜய் – தீயாய் பரவும் வீடியோ!

CM Vijay In Silverstone: கோலிவுட் சினிமாவில் நடிகராக மக்களின் மனதை கவர்ந்து, தற்போது இந்தியாவிற்காக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டுவருபவர் அஜித். இவர், லண்டனில் நடக்கும் லீ மான்ஸ் கார் ரேஸில் கலந்துகொள்ளும் நிலையில், தற்போது அஜித் குமாரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் .

பல ஆண்டுகள் நட்பு.. அஜித் குமாரை சந்தித்த முதல்வர் விஜய் –  தீயாய் பரவும் வீடியோ!
முதல்வர் விஜய் மற்றும் அஜித் சந்திப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Sep 2026 20:32 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து தற்போது, தமிழக அரசியலில் மாபெரும் தூணாக இருந்துவருபவர் முதலமைச்சர் விஜய் (CM Vijay). இவர் சினிமாவில் நடிக்கும்போது சூர்யா (Suriya) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல உச்ச நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். அதனால் இவர்களின் நட்பு இன்றுவரையிலும் தொடர்ந்துவருகிறது. தற்போது முதல்வர் விஜய் தமிழக முதலமைச்சராக மக்கள் சேவையில் இருக்கும் நிலையில், சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார். இந்நிலையில், இன்று (12/09/2026) தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக லண்டனுக்கு முதல்வர் விஜய் வந்திருந்த நிலையில், நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார் பங்குபெறும், லீ மான்ஸ் போட்டியை (Le Mans car race) துவக்கிவைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக முதல்வர் விஜய், லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் என்ற பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள மைதானத்தில் நடைபெறும் அஜித் குமாரின் கார் ரேஸ் போட்டியை முதல்வர் விஜய் துவக்கி வைக்கிறார். இந்நிலையில் முதல்வர் விஜய் சில்வர்ஸ்டோன் வந்தடைந்த நிலையில், அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஆரமிக்கலாமா?.. முடிச்சிரலாமா..! கானா இசையில் கதையில்.. ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 பட ட்ரெய்லர் வெளியீடு!

அஜித் குமார் – முதல்வர் விஜய் சந்திப்பு குறித்து வைரலாகும் வீடியோ பதிவு:

முதல்வரும், முன்னாள் நடிகருமான விஜய்க்கு அதிக ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உண்டு. அந்த விதத்தில் லண்டனில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கும் நிலையில், சில்வர்ஸ்டோன் வந்தடைந்த முதல்வர் விஜய்யிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதன் பிறகு, தனது நண்பரும், சக நடிகருமான அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். கார் ரேஸரான அஜித் மற்றும் முதல்வர் விஜய் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துள்ளனர். இந்நிலையில் இருவருமே தங்களின் ரசிகர்களை பார்த்து கையசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சட்டங்களுக்கு நடுவே சத்தமே இல்லாத கூட்டம்.. போட்டியாளர்களை வெளுத்துவாங்கப்போகும் விஜய் சேதுபதி – வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!

முதலமைச்சர் விஜய் பற்றி அஜித் கூறிய விஷயம்:

சமீபத்தில் ஆங்கில பத்திரிகை நேர்காணலில் பேசியிருந்த அஜித் குமார், சி. ஜோசப் விஜய் தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி நம்மைச் சந்திக்க வந்துள்ளார். நாங்கள் கடந்த 34 ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி இருந்தோம். அவர் தற்போது, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அழைப்பை ஏற்று வந்து இதைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி என அதில் கூறியிருந்தார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் அஜித் மற்றும் முதல்வர் விஜய்யின் சந்திப்பு நடக்கவிருக்கும் நிலையில், ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us