IND vs NZ: கடைசி 2 ஒருநாள் போட்டியில் விளையாடாதது ஏன்..? கேப்டன் கில் விளக்கம்!
Shubman Gill on Squad Rotation: இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர் நவ.4ல் தொடங்குகிறது. சுப்மன் கில் முதல் 3 போட்டிகளுக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி 2 போட்டிகளுக்கும் தலைமை தாங்குகின்றனர். டெஸ்ட் தொடர் நெருக்கம் காரணமாக சில முக்கிய வீரர்கள் கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார்கள். 'அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்' என கில் விருப்பம் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நாளை அதாவது 2026 நவம்பர் 4ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஒருநாள் தொடரில் சுப்மன் கில் இந்திய அணிக்கு (Indian Cricket Team) தலைமை தாங்குகிறார். கில் முதல் 3 போட்டிகளுக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கும் அணிக்கு தலைமை தாங்குகிறார். தொடர் தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணியின் கேப்டன் கில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கட்டுக்கடங்காத ரசிகர்கள்.. அனைவருக்கும் ஆட்டோகிராஃப் போட்ட கோலி!
அது என் கைகளில் இருந்திருந்தால்…
நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடாதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்மன் கில், “அது என் கையில் இருந்து, அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் இருந்திருந்தால், அவர்கள் முழு ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்று நான் விரும்பியிருப்பேன். ஆனால், 2 டெஸ்ட் போட்டிகளும் மிகவும் முக்கியமானவை. முதலில் ஒருநாள் போட்டிகள், பிறகு டி20 போட்டிகள், அதன்பின் டெஸ்ட் போட்டிகள் என இருந்திருந்தால், எங்களின் வலிமையான அணியைக் கொண்டு 5 ஒருநாள் போட்டிகளிலும் நாங்கள் விளையாடியிருக்க முடியும். ஆனால், ஒருநாள் தொடருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறைவாக இருந்ததால் எங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை.” என்றார்.




கில் மற்றும் கே.எல். ராகுல் உள்ளிட்ட பல வீரர்கள், தொடரின் கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா – நியூசிலாந்து இடையிலான் ஒருநாள் போட்டிகள் வருகின்ற 2026 நவம்பர் 15ம் தேதியுடன் முடிவடைகின்றன. இதன் பிறகு இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற 2026 நவம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இரு தொடர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைவாக இருப்பதால், சில வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் இரண்டுமே மிகவும் முக்கியமானவை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு இடையில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதால், டெஸ்ட் அணி வீரர்கள் கடைசி 2 ஒருநாள் போட்டிகளைத் தவிர்க்க வேண்டியுள்ளது என்று சுப்மன் கில் தெரிவித்தார்.
ALSO READ: நியூசிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ரோஹித் சர்மாவுக்கு காத்திருக்கும் சாதனை வேட்டை..!
முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் [துணை கேப்டன்], கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், நமன் தீர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் ப்ரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்)), முகமது சிராஜ், குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி
நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), அக்சர் படேல், நமன் தீர், ஆகிப் நபி, குர்னூர் ப்ரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்)