Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Shubman Gill

Shubman Gill

 

இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு, சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 8, 1999 இல் பிறந்த கில், 2018 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் புகழ் பெற்றார். அந்த போட்டியில் 104.50 சராசரியுடன் 418 ரன்கள் எடுத்து அசத்தினார். இது இந்திய சீனியர் அணிக்கு பாதையை வழிவகுத்தது. இந்தியாவின் வலது கை தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில், பஞ்சாபின் ஃபாசில்காவில் லக்விந்தர் சிங் கில் மற்றும் கீர்ட் கில் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே, கில் தனது கிரிக்கெட்டின் குருவாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணனை ஏற்றுக்கொண்டார். 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பைக்கு பிறகு, சுப்மன் கில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2017-18 ரஞ்சி டிராபியில், 2017-18 ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக தனது முதல் தர அறிமுகத்தை பெற்று, அசத்த 2019ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.

Read More

Shubman Gill: கில்லின் காயம்.. குவஹாத்தி டெஸ்ட் போட்டியை மிஸ் செய்வாரா?

IND vs SA 2nd Test: கொல்கத்தாவில் நடந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. சொந்த மண்ணில் தொடர் தோல்வியைத் தவிர்க்க இந்தியா விரும்பினால், குவஹாத்தியில் உள்ள பராபதி மைதானத்தில் வெற்றி பெறுவதுதான் ஒரே வழி.

Gautam Gambhir: சொதப்பும் கம்பீரின் பயிற்சி.. டெஸ்ட் போட்டியில் தடுமாறுகிறதா இந்திய அணி?

Indian Cricket Team: முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர்களான ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரியின் பயிற்சியை ஒப்பிடும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீரின் சாதனை மோசமாகவே உள்ளது. கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக வென்றது.

IND vs SA 1st Test: 2வது டெஸ்டில் சுப்மன் கில் விளையாடுவாரா..? கவுதம் கம்பீர் கொடுத்த ட்விஸ்ட்!

Shubman Gill: இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்ற ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிட்ச்க்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி, பேட்ஸ்மேனின் மனநிலையை சோதிக்கும் என்று கவுதம் கம்பீர் கூறினார்.

IND vs SA: கலக்கிய ஜடேஜா- குல்தீப் கூட்டணி.. 97 ரன்களில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா!

IND vs SA 1st Test Day 2: தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் டெம்பா பவுமா 29 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

Shubman Gill: 3 பந்துகளை மட்டுமே சந்தித்த கில்.. பாதியில் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?

India - South Africa 1st Test: சுப்மன் கில் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ​​காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார் . கில்லுக்கு ஏற்பட்ட இந்த கழுத்து பிரச்சனையின் தீவிரம் அவரது பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியும்.

IND vs SA 1st Test: இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எப்போது? இலவச​​மாக எங்கு பார்க்கலாம்..?

IND vs SA 1st Test Live Streaming: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 2025 நவம்பர் 14ம் தேதியான நாளை தொடங்கி வருகின்ற 2025 நவம்பர் 18ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும்.

India vs South Africa 1st Test: கடினமாக காட்சியளித்த பிட்ச்.. ஈடன் கார்டனில் கில் அதிருப்தி.. நேரில் ஆய்வு செய்த கங்குலி..!

Shubman Gill: இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பந்துவீச்சி பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தை ஆய்வு செய்தனர். அப்போது, ஆடுகளத்தை ஆய்வு செய்த பிறகு, அதன் வடிவங்கள் சரியாக இல்லை என்பதை உணர்ந்தனர்.

IND vs SA Test Series: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 16 டெஸ்ட் தொடர்.. யார் அதிக ஆதிக்கம்..?

IND vs SA Test Head To Head: இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான டெஸ்ட் தொடர் 1992-93ம் ஆண்டு காலக்கட்டத்தில் தொடங்கியது. இந்திய அணி 4 டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்கா சென்றது. இதில், தென்னாப்பிரிக்கா 1-0 என வென்றது. 1996-97 இல், தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் தொடருக்காக இந்தியா வந்தது. அதில், இந்திய அணி 2-1 என வென்றது.

Shubman Gill: தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்.. இந்திய அணியில் வெளியேற்றப்படுவாரா?

Indian Cricket Team: இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லின் இடம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. முன்னதாக, கில் இல்லாத நேரத்தில் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இந்திய அணி கில்லை துணை கேப்டனாக நியமித்தது. மேலும், இந்திய அணிக்காக இன்னிங்ஸைத் தொடங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

IND vs SA Test: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்… துணை கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்!

India vs South Africa 2025: கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்த இரண்டு வீரர்கள் இந்த அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன்படி, இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என். ஜெகதீசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

Shubman Gill: பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. சுப்மன் கில்லை அலறவிட்ட ரசிகர்!

இந்திய கிரிக்கெட் கேப்டன் சுப்மன் கில்லை சந்தித்த ரசிகர் ஒருவர் கைகுலுக்கியபின் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கில்லின் அமைதியான எதிர்வினை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டு உறவுகளில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.

Australia vs India 1st ODI: தீபாவளி பரிசை தர தவறிய இந்திய அணி.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி!

Australia Cricket Team: மழையால் தடைப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது, ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு DLS விதிப்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து அதை எட்டியது.

Shubman Gill Records: 10வது சதத்துடன் பல்வேறு சாதனைகள்.. இந்திய அணியின் ரன் மெஷினாக சுப்மன் கில்!

IND vs WI 2nd test Day 2: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

IND vs WI 2nd Test: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட்! இன்று தொடங்கும் போட்டியை எப்போது, ​​எங்கே காணலாம்?

IND vs WI 2nd Test Live Streaming: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 30 போட்டிகளிலும்,  இந்திய அணி 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

IND vs AUS: இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியா செல்லும்? ரோஹித் – கோலி பயணம் எப்போது..?

India Tour of Australia 2025: இந்திய ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருப்பது இதுவே முதல் முறை. அணி அறிவிப்பின் போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் பேட்ஸ்மேன்களாக விளையாடுவார்கள்.