ஜனநாயகன் படத்தின் மூலம் தமிழில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை மமிதா பைஜூ, சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த ஹீரோ குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், நான் ஒரு பெரிய அல்லு அர்ஜூன் ரசிகை. ஒருகட்டத்தில் அவர் மீது ரொம்பவே பைத்தியமாக இருந்தேன். அவரது ஜூலாயி மற்றும் இதரமாயிலதோ படங்களில் அவர் அணிந்திருந்த கேசியோ வாட்ச்சை பார்த்து எனக்கும் அதில் ஆர்வம் வந்தது.