Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shubman Gill: விளையாட விருப்பம்.. அணியுடன் விமானத்தில் பயணித்த கில்! பிசிசிஐ மருத்துவக்குழு கூறுவது என்ன?

IND vs SA Test Series: முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்திற்குப் பிறகு கில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மறுநாள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து நேற்று அதாவது 2025 நவம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்ட பிசிசிஐ செய்திக்குறிப்பில், 26 வயதான சுப்மன் கில் அணியுடன் குவஹாத்திக்கு பயணம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shubman Gill: விளையாட விருப்பம்.. அணியுடன் விமானத்தில் பயணித்த கில்! பிசிசிஐ மருத்துவக்குழு கூறுவது என்ன?
சுப்மன் கில்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2025 11:08 AM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (IND vs SA Test Series) இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) விளையாடமாட்டார். சுப்மன் கில் இல்லாத நிலையில் ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்துவார். 26 வயதான சுப்மன் கில்லுக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் போது கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, 124 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்யவோ அல்லது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவோ அவரால் முடியவில்லை.

கொல்கத்தாவில் நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸைத் தவறவிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், குவஹாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் விளையாட மாட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு, சுப்மன் கில் விளையாட வேண்டும் என்ற தீவிர ஆசையில் இருந்ததால், குவஹாத்திக்கு பயணம் செய்தார். இருப்பினும், அவரால் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது.

ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்டில் சிக்கல்.. மேலும் 3 வீரர்கள் மருத்துவமனை அனுமதி..!

கில்லின் காயம் குறித்து பிசிசிஐ அப்டேட்:


முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்திற்குப் பிறகு கில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மறுநாள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து நேற்று அதாவது 2025 நவம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்ட பிசிசிஐ செய்திக்குறிப்பில், 26 வயதான சுப்மன் கில் அணியுடன் குவஹாத்திக்கு பயணம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ மருத்துவக் குழு அவரைக் கண்காணிக்கும். அந்த செய்திக்குறிப்பில், “தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டின் இரண்டாவது நாளில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்தில் காயம் அடைந்தார், போட்டிக்குப் பிறகு மதிப்பீட்டிற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சுப்மன் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்தார். மேலும் நவம்பர் 19, 2025 அன்று குவஹாத்திக்கு அணியுடன் பயணம் செய்தார்.

ALSO READ: 2வது டெஸ்டில் இருந்து வெளியேறும் சுப்மன் கில் – அவருக்கு பதிலாக களமிறங்கப்போவது யார் தெரியுமா?

தென்னாப்பிரிக்கா அணி முன்னிலை:

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா தொடரில் 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். கடந்த 2025 நவம்பர் 18ம் தேதி இந்திய அணி ஈடன் கார்டனில் விருப்ப பயிற்சி அமர்வை நடத்தியது. சாய் சுதர்ஷன், துருவ் ஜூரெல், ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா மற்றும் தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்கள் இதில் பங்கேற்றனர். குவஹாத்தி டெஸ்டின் ஐந்து நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கும்.