IND vs SA 2nd Test: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்.. அதிரடியாக மாற்றப்பட்ட போட்டி நேரம்! ஏன் தெரியுமா?
IND vs SA 2nd Test Timings: 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயத்தை இந்திய அணி எதிர்கொள்கிறது. முன்னதாக, 1999-2000 ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. பின்னர் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே 2 போட்டிகள் (India vs South Africa 2nd Test) கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் தொடக்கம் இந்தியாவுக்கு மிகவும் மோசமாக இருந்தது. கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இப்போது தொடரின் இரண்டாவது போட்டி வருகின்ற 2025 நவம்பர் 22ம் தேதி நடைபெறும். இது இந்திய அணிக்கு செய் அல்லது செத்து மடி போட்டியாகும். இந்த தொடரை சமன் செய்ய, இந்திய அணி இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். இந்தப் போட்டி குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறை. இந்திய அணி இங்கு இதுவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது.
தொடரை இழக்குமா இந்திய அணி..?
25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயத்தை இந்திய அணி எதிர்கொள்கிறது. முன்னதாக, 1999-2000 ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. பின்னர் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த முறை, தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்ற ஒரு டிரா மட்டுமே தேவையாக உள்ளது.
இந்திய அணிக்கு மிகப்பெரிய கவலையே கேப்டன் சுப்மன் கில்லின் காயம்தான். கில் இந்தப் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டது. இதன் காரணமாக கில் முழுப் போட்டியிலிருந்தும் வெளியேறியேறும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் கில் வெளியேறினால், இந்திய அணிக்கு பெரிய அடியாக இருக்கலாம். இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான குவஹாத்தி டெஸ்டின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. குவஹாத்தி வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளது. இங்கு சூரிய அஸ்தமனம் சீக்கிரமாகவே நிகழ்கிறது. இதன் காரணமாக, இந்த போட்டிக்கான டாஸ் 8.30 மணிக்கே போடப்பட்டு காலை 9 மணிக்கு தொடங்கும். இது தவிர, முதல் அமர்வு மதிய உணவிற்கு பதிலாக டீ பிரேக்குடன் நடைபெறும். இரண்டாவது அமர்வு மதிய உணவுக்குப் பிறகு நடைபெறும்.




குவஹாத்தி டெஸ்ட் போட்டியின் அட்டவணை:
- டாஸ்: காலை 8:30 மணி
- முதல் அமர்வு: 9:00 முதல் 11:00 வரை
- டீ இடைவேளை: 11:00 முதல் 11:20 வரை
- இரண்டாவது அமர்வு: காலை 11:20 மணி முதல் மதியம் 1:20 மணி வரை
- மதிய உணவு: மதியம் 1:20 முதல் 2:00 மணி வரை
- மூன்றாவது அமர்வு: 2:00 முதல் 4:00 வரை
குளிர்காலத்தில் வடகிழக்கு இந்தியாவில் சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் சீக்கிரமாகவே நடக்கும். மாலை 4 மணிக்குப் பிறகு வெளிச்சம் குறைந்துவிடும், இதனால் ஆட்டத்தை சீக்கிரமாகவே தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.