இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு என்பது மனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. வேலைவாய்ப்பு முதல் வங்கிச் சேவைகள் வரை அனைத்திலும் AIன் தாக்கம் பெருகி வருகிறது. ஆனால், இந்தியச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் 'சாதி அமைப்பு' குறித்து AI தற்போதே தெரிந்து வைத்துள்ளது என்பதும், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் புதிய ஆய்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.