சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததே நான் மறந்துவிட்டேன் – ஹாரிஸ் ஜெயராஜ்!
Music Director Harris Jayaraj Recent Speech: தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான மின்னலே என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் அவருக்கும் அறிமுகப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 90களில் பிறந்தவர்களுக்கு ஹாரிஸ் ராஜ் இசையில் வெளியான பாடல்கள் ஒரு வைப் மெட்டீரியலாகவே உள்ளது. மேலும் அவரது பாடல்களை அவர்கள் ஹாரிஸ் மாம்ஸ் வைப் என்றே அழைப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய், அஜித், கமல் ஹாசன், விக்ரம், சூர்யா, சிலம்பரசன், ரவி மோகன் என பலரது படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் அடுத்ததாக வெளியாக உள்ள காதல் ரீசெட் ரிப்பீட் என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததே நான் மறந்துவிட்டேன்:
ஹாரிஸ் ஜெயராஜ் பேசியதாவது இது எனக்கு சினிமாவில் 25வது வருடம் என்பதை மறந்துவிட்டேன். 1999-ல் ஒரு விளம்பரத்திற்காக கௌதம் மேனனை சந்தித்தேன். 2000ல் மின்னலே படத்திற்காக நாங்கள் மீண்டும் இணைந்துள்ளோம். தொடர்ந்து எனது இசையில் மொத்தம் 64 பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன், அவர்கள் அனைவரும் பெரிய பாடகர்களாக மாறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 12 ஹீரோக்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். அதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி காதல் ரீசெட் ரிபீட் கொடுத்ததற்கு விஜய்க்கு நன்றி என்றும் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்து இருந்தார்.
Also Read… Priyanka Mohan: மறைந்த அந்த நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை – பிரியங்கா மோகன் ஓபன் டாக்!
இணையத்தில் வைரலாகும் ஹாரிஸ் ஜெயராஜ் பேச்சு:
#Harrisjayaraj:
“I forgot about the fact that this is my 25 th year in the industry. I met #GauthamMenon in 1999 for an ad. In 2000, we did Minnale🎵
I have introduced 64 singers and I’m happy that they have all become big singers. I have introduced 12 heroes. Very happy about… pic.twitter.com/8m9PzhZB4l— AmuthaBharathi (@CinemaWithAB) February 28, 2026
Also Read… கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி என்னாச்சு? போஸ்டர் அடித்து கேள்வி எழுப்பும் சூர்யா ரசிகர்கள்