AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்னோடு நீ உன்னோடு நான்.. திருமண புகைப்படங்களை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!

Rashmika Mandanna And Vijay Deverakonda Wedding: டோலிவுட் காதல் ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணத்தில் இணைந்துள்ளனர் என்பது தெரிந்ததே. இன்று (2026 பிப்ரவரி 26) காலை தெலுங்கு முறைப்படி இவர்களின் திருமணம் நடந்த நிலையில், கணவன் மனைவியாக தங்களின் திருமண புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளனர்.

என்னோடு நீ உன்னோடு நான்.. திருமண புகைப்படங்களை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Feb 2026 19:50 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் காதல் ஜோடியாக அறியப்பட்டவர்கள் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இந்த ஜோடியானது சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றவர்கள் என அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இவர்கள் இருவரும் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான “கீதா கோவிந்தம்” (Geetha Govindam) என்ற திரைப்படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்திருந்த நிலையில், இப்படத்தில் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி அருமையாகவே இருந்தது. அந்த வகையில் இதையடுத்தும் சில படங்களில் இணைந்தே நடித்திருந்த நிலையில், இவர்கள் ஜோடி ரசிக்கப்பட்டது. பின் சில ஆண்டுகளாக எந்த படங்களிலுமே நடிக்கவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்தது. இருந்தாலும் இவர்கள் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துவந்தது. இந்நிலையில் இதை அதிகாரபூர்வமாக சமீபத்தில் இவர்கள் அறிவித்திருந்தனர். மேலும் இவர்கள் இருவரின் திருமணம் 2026 பிப்ரவரி 26ம் தேதியில் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 26ம் தேதியில் உதய்பூரில் உள்ள அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இன்று காலை தெலுங்கு முறைப்படி இவர்கள் இருவரின் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், ராஜா ராணி போல இவர்கள் தோற்றமளிக்கும் திருமணம் புகைப்படங்களை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்.. நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த திருமணம் தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவு:

இந்த பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா, “அனைவருக்கும் எனது கணவர் மிஸ்டர் விஜய் தேவரைகொண்டவை அறிமுகப்படுத்துகிறேன்” என தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் கீழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

ராஷ்மிகாவை மணந்தது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த பதிவின் கீழ், “தனது நெருக்கமான நண்பரை மனைவியாக்கிக்கொண்டேன்” என அதில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த ஜோடி தங்களின் திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் இயக்குநராக புது படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணத்தை “விரோஷ்” என பெயரிடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தெலுங்கு முறைப்படி திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, நடிகை ராஷ்மிகா கர்நாடகாவை சேர்ந்தவர் என்ற நிலையில், மாலையில் கர்நாடக முறையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளதாம். தெலுங்கு மற்றும் கர்நாடக முறை என இரு முறை திருமணம் செய்துகொண்டு இவர்களின் உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளனர். தற்போது இவர்களின் திருமணத்திற்கு பிரதமர் உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us