AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சில நேரங்களில் பாரமாக உணரும் உலகில், இந்தப் படம் நம்பிக்கையைப் போல உணர்ந்தேன்… தாய் கிழவி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் அட்லி

Director Atlee Praised Radhika Sarathkumar's Thaai Kizhavi Movie: பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லி. இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவில் தாய் கிழவி படத்தை வெகுவாகப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சில நேரங்களில் பாரமாக உணரும் உலகில், இந்தப் படம் நம்பிக்கையைப் போல உணர்ந்தேன்… தாய் கிழவி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் அட்லி
இயக்குநர் அட்லிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Feb 2026 18:45 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அட்லி குமார். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் மூன்று படங்களையும் தளபதி விஜயை வைத்தே இயக்கினார். அதன்படி இயக்குநர் அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் அடுத்தடுத்து தெரி, மெர்சல் மற்றும் பிகில் ஆகியப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த மூன்று படங்களும் வரிசையாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி பாலிவுட் பக்கம் சென்றார்.

அங்கு பாலிவுட் பாட்சாவாக வலம் வரும் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இது பாலிவுட் சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டும் இன்றி 1000 கோடிகள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் சமீபத்தில் இயக்குநர் அட்லி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தாய் கிழவி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் அட்லி:

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் தாய் கிழவி. இந்தப் படம் நாளை 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படம் குறித்து அட்லி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சில நேரங்களில் பாரமாக உணரும் உலகில், இந்தப் படம் நம்பிக்கையைப் போல உணர்ந்தேன். உணர்ச்சிபூர்வமானது, அர்த்தமுள்ளதாக இருந்தது, சிறந்த மனித விழுமியங்களை வேரூன்றியுள்ளது. தயவுசெய்து திரையரங்குகளில் இதை அனுபவித்துப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டான் படத்தின் கதையை கேட்கும்போதே சொன்னேன்… சமுத்திரக்கனியின் சுவாரஸ்ய பேச்சு

இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… Ken Karunas: தமிழில் எந்த நடிகையும் என்னுடன் நடிக்க ரெடியாக இல்ல – வெளிப்படையாக பேசிய கென் கருணாஸ்!

Follow Us