யாசின் டாக்ஸிக் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனங்கள்
Toxic Movie Tamil Nadu Distributors List : கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் தற்போது உறுவாகி உள்ள டாக்ஸிக் படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது.
கன்னட சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் யாஷ். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து வந்த யாஷ் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ஜம்படா ஹுடுகி என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கினார். இந்தப் படத்தில் இவர் நாயகனாக நடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ராக்கி என்ற படத்தின் மூலம் யாஷ் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து கன்னட சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்த யாஷ் தற்போது பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் சாப்டர் 2 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் யாஷ் பான் இந்திய நடிகராக மாறியது குறிப்பிடத்தக்கது.




டாக்ஸிக் பட தமிழ்நாடு விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனங்கள்:
இந்த நிலையில் நடிகர் யாஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தினை இயக்குநர் கீது மோகந்தாஸ் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு கீது மோகந்தான் உடன் இணைந்து நடிகர் யாஷ் திரைக்கதை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வருகின்ற 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்ற நிலையில் படத்தின் தமிழ் நாட்டு விநியோக உரிமையை பிரபல நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதன்படி திங்க் ஸ்டுடியோஸ், ஒயிட் நைட்ஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ் மூலம், எஸ் பிக்சர், 5 ஸ்டார் கே செந்தில் ஆகிய நிறுவனங்கள் விநியோகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஜெய்யின் நடிப்பில் சட்டென்று மாறுது வானிலை படத்திலிருந்து வெளியானது பாடல்
டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Takeover continues🔥
Four powerhouse distributors join forces to unleash #Toxic across
Tamil Nadu: @ThinkStudiosInd#SPictureFilms#WhiteNightsEntertainment through @tridentartsoffl#5StarSenthil#Toxic in cinemas worldwide from 19.03.2026.#ToxicTheMovie#ToxicOnMarch19th… pic.twitter.com/uoJBzh5AnZ— KVN Productions (@KvnProductions) February 26, 2026
Also Read… மெண்டல் மனதில் படத்திலிருந்து உயிரே உயிரே பாடலை வெளியிட்ட கார்த்தி!