AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mental Manadhil: ‘மெண்டல் மனதில்’ பட முதல் பாடலை வெளியிடும் நடிகர் கார்த்தி – அறிவிப்பு இதோ!

Mental Manadhil Movie First Single : நடிகராகவும், இசையமைப்பாளராகவும் தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பிலும், இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்திலும் தயாராகியுள்ள படம்தான் மெண்டல் மனதில். தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலை நடிகர் கார்த்தி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mental Manadhil: ‘மெண்டல் மனதில்’ பட முதல் பாடலை வெளியிடும் நடிகர் கார்த்தி – அறிவிப்பு இதோ!
மென்டல் மனதில் படத்தின் முதல் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Feb 2026 20:41 PM IST

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டார்லிங் (Darling) என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக சினிமாவில் நுழைந்தார். அதற்கு முன் படங்களில் வெறும் இசையமைப்பாளராக மட்டுமே பணியாற்றிவந்தார். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து கிட்டத்தட்ட இதுவரை 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 100வது படமாக இவருக்கு சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) பராசக்தி (Parasakthi) படமானது அமைந்திருந்தது. அந்த வகையில் இவர் தற்போது கதாநாயகனாகவும் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் இந்த 2026ம் ஆண்டில் மட்டும் இவரின் நடிப்பில் 2 படங்கள் வெளியாகி காத்திருக்கிறது. அந்த படங்களில் ஒன்றுதான் “மெண்டல் மனதில்” (Mental Manadhil). இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் (Selvaraghavan) இயக்கியுள்ளார். இப்படமானது வித்தியாசமான காதல் கதைக்கத்தில் தயரையுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதியில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் முதல் பாடலான உயிரே உயிரே என்ற பாடலை, நடிகர் கார்த்தி, நாளை 2026 பிப்ரவரி 25ம் தேதியில் மாலை 05 மணியளவில் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கமல் ஹாசன் – ரஜினிகாந்த் இணையும் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பார்த்து பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா

மெண்டல் மனதில் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து வெளியான பதிவு:

இந்த மெண்டல் மனதில் திரைப்படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை மதுரியா ஜெயின் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் மோனிஷா மோகன் மேனன், வித்யுலேகா ராமன் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற பணிகளை செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமான நிலையில், தற்போது முழுமையாக நிறைவடிந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: கிராமப்புற கலக்கல் காமெடியில்.. வெளியானது ராதிகா சரத்குமாரின் ‘தாய் கிழவி’ பட ட்ரெய்லர்!

இப்படத்தை முதலில் 2026 பிப்ரவரி மாதத்தில் காதலர்கள் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், ஷூட்டிங் நிறைவடையாத காரணத்தால தேதி மாற்றப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தை வரும் 2026 மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. மேலும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி ராஜ் என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இவரின் அடுத்த படமான மெண்டல் மனதில் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.