வெங்கட் பிரபுவின் படம் என்ன ஆச்சு? சேயோன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் இணையும் இயக்குநர் இவரா?
Sivakarthikeyan Confirms Next Film: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் தயாரிப்பில் தாய் கிழவி என்ற திரைப்படமானது தயாராகியுள்ள நிலையில், இதன் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றிருந்தது. இதில் பேசிய சிவகார்த்திகேயன், தனது அடுத்த திரைப்பட இயக்குநரை உறுதி செய்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற படமானது வெளியானது. கடந்த 2026 ஜனவரி மாதத்தில் வெளியான இந்த திரைப்படம், மிக பிரம்மாண்டமாக ஏதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே வரவேற்கப்படவில்லை. இந்த படமானது வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் படம்தான் சேயோன் (Seyon). இப்படத்தை தாய் கிழவி (Thaai Kizhavi) படத்தை இயக்கியிருந்த இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த புது திரைப்படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் தாக் கிழவி. இதில் ராதிகா சரத்குமார் நடித்திருக்கும் நிலையில், 2026 பிப்ரவரி 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் மற்றும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியானது 2026 பிப்ரவரி 23ம் தேதியில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சிவகார்த்திகேயன், சேயோன் படத்திற்கு பின் உருவாகும் தனது புது படத்தின் இயக்குநர் யார் என உறுதி செய்துள்ளார்.




இதையும் படிங்க: வட சென்னை படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அரசன் படத்திலும் உள்ளனர் – சமுத்திரக்கனி கொடுத்த சூப்பர் அப்டேட்
சிவகார்த்திகேயனின் 27வது திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் யார்:
அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். மேலும் ஆவர் தனது புது படத்தின் இயக்குநர் பற்றியும் தெரிவித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், “எல்லாருமே நான் தாய் கிழவி திரைப்படத்தை பார்த்துவிட்டுத்தான், சிவகுமாருடன் சேயோன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அவர் தாய் கிழவி படத்தின் கதை என்னிடம் சொல்லும்போதே, அவருடன் படம் பண்ணவேண்டும் என முடிவு செய்துவிட்டேன். இதை எனது இணை தயாரிப்பாளரிடமும் சொல்லியிருந்தேன். மேலும் இந்த மேடையிலே நான் கூறுகிறேன், சேயோன் திரைப்படத்திற்கு அடுத்த படமும் நான் சிவகுமார் முருகேசனுடன்தான் இணைக்கிறேன், இது வசூலுக்காகவோ, பிரபலத்திற்காக இல்ல, சிவகுமார் முருகேசனின் உண்மையான குணத்திற்காக” என அதில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தனது புது திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ பதிவு:
#Sivakarthikeyan Recent Confirm Next Film 📽️
— After #Seyon, I will do another film with #SivakumarMurugesan.
— I repeat, I have no business with this or the results, I am saying this out of respect for Sivakumar Murugesan.— Movie Tamil (@_MovieTamil) February 24, 2026
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்திற்கு பின் இயக்குநர் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் புது படத்தில் இணைவதாக இருந்தது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் இணைந்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இவர் வெங்கட் பிரபுவின் படத்தில் இணைவார் என வட்டாரங்கள் தெரிவித்து வந்தது.
இதையும் படிங்க: கல்கி 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நடிகர் கமல் ஹாசன்… வைரலாகும் போட்டோ!
ஆனால் சேயோன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில்தான் புது படத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையிம் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் நிலைமை என்ன என தெரியவில்லை. இப்படம் கைவிடப்பட்டதா? அல்லது சிவகார்த்திகேயனின் 28வது படமாக இது உருவாகுமா? என சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இருவருமே அவர்களின் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.