ஜூலை மாதம் 3 ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று ஜூலை 10, 2026 22 காரட் தங்கம் கிராமுக்கு 30 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம். 2026, ஜனவரி மாதம் முதலே தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் நிலமை அப்படியே தலைகீழாக மாறியது. காரணம், ஜனவரி மாதத்தில் 16,000க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம், ஜூன் மாதத்தில் 13,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை 1 லட்சத்திற்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.