AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பட்டாம்பூச்சி பாடலுக்கு அழகாக டான்ஸ் ஆடிய மமிதா பைஜூ – வைரலாகும் வீடியோ

Mamitha Baiju Dance Video Viral On Social Media | மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

பட்டாம்பூச்சி பாடலுக்கு அழகாக டான்ஸ் ஆடிய மமிதா பைஜூ – வைரலாகும் வீடியோ
மமிதா பைஜூImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jul 2026 20:09 PM IST

மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்ததன் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகை மமிதா பைஜூ. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாயகியக, நாயகியின் தோழியாக நடித்து வந்த நடிகை மமிதா பைஜூ பிறகு மலையாள சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகியாக நடிக்க தொடங்கிய உடனே தொடர்ந்து படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து நடிகை மமிதா பைஜூ தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பலப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் டியூட் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் வரிசையாக படங்கள் வெளியாக உள்ளது.

அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக நடிகை மமிதா பைஜூ நடிப்பில் கர படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜன நாயகன் இந்த ஜூலை மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பட்டாம்பூச்சி பாடலுக்கு அழகாக டான்ஸ் ஆடிய மமிதா பைஜூ:

இந்த நிலையில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நடனம் ஆடி உள்ளார். அவர் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இருந்து வெளியான பட்டாம்பூச்சி என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நடன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தனது கிராமத்திற்காக அடையாளத்தை தேடி ஓடும் நாயகன்… ஓடிடியில் வெளியாகி உள்ள ராம் சரணின் பெத்தி படம் எப்படி இருக்கு? – விமர்சனம் இதோ

இணையத்தில் வைரலாகும் மமிதா பைஜூவின் டான்ஸ் வீடியோ:

Also Read… Bhagyashree Borse: என்ன மட்டுமல்ல.. எந்த நடிகையையும் அப்படி சொல்லாதீங்க – பாக்யஸ்ரீ போர்ஸ் பேச்சு!

Follow Us