AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bhagyashree Borse: என்ன மட்டுமல்ல.. எந்த நடிகையையும் அப்படி சொல்லாதீங்க – பாக்யஸ்ரீ போர்ஸ் பேச்சு!

Bhagyashree Borse Slams Actress Criticism: தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவரின் நடிப்பில் சினிமாவில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் படம் லெனின். இப்படத்தின் நிகழ்ச்சியில், நடிகைகளை பற்றி குறை கூறுவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Jul 2026 21:08 PM IST
தற்போது சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களை ஈர்த்துவருபவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் துல்கர் சல்மான் முதல் விஜய் தேவரகொண்டா போன்ற பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

1 / 6
கடந்த 2023ம் ஆண்டில் யாரியன் 2 என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த இவர், இப்படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் தெலுங்கு சினிமாவின் மூலமாகவே கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

2 / 6
2024ம் ஆண்டில் வெளியான சந்து சாம்பியன் என்ற படத்தில், நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்து, தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திலும் இணைந்து நடித்திருந்தார்.

3 / 6
பின் தமிழில் காந்தா என்ற படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். பின் ஆந்திரா கிங் தாலுகா போன்ற படத்தில் நடித்தார். இவரின் நடிப்பில் இறுதியாக லெனின் என்ற படம் வெளியானது. அப்பட நிகழ்ச்சியில் நடிகைகளை குறை கூறுவது தவறு என்பது பற்றி உருக்கமான பேசியிருந்தார்.

4 / 6
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், ஒரு படமானது தோல்வியடைந்தால் அதற்கு நடிகைகள் மட்டும் குறை கூறுவது நியாமற்றது. 2 அல்லது 3 படங்கள் தோல்வியடைந்தால் துரதிர்ஷ்டசாலி என முத்திரை குத்திவிடுகிறார்கள்.  நானும் அவ்வாறு பல விமர்சனங்களை கடந்து வந்தவள்தான்.

5 / 6
என்னை மட்டுமல்ல, வேறு எந்த நடிகைகளையும், இந்த முறையில் விமர்சிப்பது தவறு என நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் மேடையில் மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். இவர் நடிப்பில் வெளியான லெனின் என்ற படம் தற்போது சினிமாவில் வெற்றிநடைப்போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6 / 6
Follow Us